போதையில் சீண்டிய விஜய்.. தரமான சம்பம் செய்த ரஜினி.. கும்பிடு போட்டு தெறித்து ஓடிய விஜய்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டாராக, ரஜினிகாந்த் கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல், 71 வயதை கடந்தும் தற்பொழுது வரை தக்க வைத்து வருகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவருடைய சினிமா வாழ்க்கையில் பல சரிவுகளை சந்தித்து இருந்தாலும்,நான் யானை அல்ல, குதிரை. விழுந்த உடனே எழுந்து விடுவேன் என்று சவால் விட்டு எழுந்து நிற்கக் கூடியவர் ரஜினிகாந்த்.

உலகம் முழுவதும் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ரஜினிகாந்த், 90களுக்கு பின்பு அவருடைய படங்களில் அரசியல் வசனங்கள் இடம் பெற தொடங்கியது. மக்கள் மத்தியில் ரஜினி அரசியல் வருகை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், 1996 சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வருக்கான சிம்மாசனத்தில் ரஜினி அமர்வதர்க்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்த போதும், வேண்டாம் என தவிர்த்தவர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் பார்முலாவை பின்பற்றி, தன்னுடைய படத்தில் அரசியல் பன்ச், ரஜினி போன்று பொது நிகழ்ச்சிகளில் குட்டி கதை செல்வது என , வளர்ந்து வந்த நடிகர் விஜய், தனக்கு போட்டியாக 2000 வருடத்திற்கு பின்பு ரஜினியை கருதி, புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதை போன்று, ரஜினியை வீழ்த்தி தமிழ் சினிமாவின் முதல் இடத்தை பிடித்து விட வேண்டும் என துடித்தார் விஜய்.

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா வெளியான பின்பு வருடத்திற்கு ஒரு படம் என்கிற முறையில், பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா என தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்தார் ரஜினிகாந்த. சுமார் மூன்று வருட இடைவெளிக்கு பின்பு 2002 ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான பாபா படம் சில அரசியல் பிரச்சனை காரணமாக தோல்வியை தழுவி மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.

பாபா படம் தோல்வியை கொண்டாடும் விதத்தில் நடிகர் விஜய் அவருடைய நண்பர்களை அழைத்து இரவு பார்ட்டி ஒன்றை வைத்து அமர்களப்படுத்திய தகவல் அப்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இனிமேல் நீ தான் சினிமாவில் நம்பர் ஒன், என நடிகர் விஐயை அவருடைய நண்பர்கள் மது போதையில் உசுப்பேத்தி விட்டுள்ளார்கள், பதிலுக்கு போதையில் விஜய்யும் சில விஷயங்கள் பேச இது ரஜினி கவனத்திற்கு சென்றுள்ளது.

அடுத்து ரஜினி நடிப்பில் சந்திரமுகி படம் 2005ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் பொது வெளியான அதே தேதியில், விஜய் நடிப்பில் சச்சின் படத்தை வெளியிட்டு ரஜினிகாந்த் உடன் நேரடியாக மோதுவதற்கு தயாரானார் விஜய், தயாரிப்பாளரிடம் ஒரு கை பார்த்துவிடுவோம், இந்த போட்டியில் நான் வெற்றி பெறுவது உறுதி,இனி நான் தான் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் என தயாரிப்பாளரை கட்டாய படுத்தி சந்திரமுகி படத்துடன் தன்னுடைய சச்சின் படத்தை மோதவிட்டார் விஜய்.

இந்த போட்டியில் ரஜினியின் சந்திரமுகி படம் மிகப்பெரிய ஹிட் அடித்து விஜயின் சச்சின் படத்தை மண்ணை கவ்வை விட்டு, என்றைக்குமே நான் தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்து காட்டினார் ரஜினிகாந்த். பாபா படத்தின் தோல்வியின் போது தான் கஷ்டத்தில் இருந்ததை, விஜய் பார்ட்டி வைத்து கொண்டாடியதை மனதில் வைத்து தான் சந்திரமுகி வெற்றி விழாவில் நான் யானை அல்ல குதிரை விழுந்த உடனே எழுந்து விடுவேன் என்று ரஜினிகாந்த் பேசியதாக அப்போது செய்திகள் வெளியானது. இதன் பின்பு தான் கும்பிடு போட்டுவிட்டு ரஜினிகாந்த் உடன் மோதுவதையே கைவிட்டு விட்டார் விஜய் என்று கூறப்படுகிறது.