நடிகர் சூர்யா அல்லது அவருடைய மனைவி ஜோதிகா நடிப்பில் எதாவது ஒரு படம் வெளியாக இருக்கின்றது என்றால், அந்த படம் வெளியாகும் முன்பு சில சர்ச்சைகளில் இவர்கள் சிக்கி அந்த சர்ச்சையின் மூலம் அவர்களின் புதிய படத்துக்கு விளம்பரம் தேடுகிறார்கள் என்கிற விமர்சனம் பொதுவாக இருந்து வருகிறது. இதற்கு முன்பு தஞ்சை பெரிய கோவில் பற்றி ஜோதிகா சர்ச்சை கூறிய வகையில் பேசியது கூட அவருடைய புதிய படத்தின் விளம்பரம் யுக்தி தான் என கூறப்பட்டது.
அதே வேலையில் தங்களின் சர்ச்சைக்குரிய செயல்களால் வரும் எதிப்புகளை திசை திருப்ப எதாவது ஒருவகையில் சமுதாயத்துக்கு உதவி செய்வது போல் செயல்பட்டு அதை செய்தியாக்கி தாங்கள் ஒரு சமூக சேவகர் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி தான் செய்த தவறை மறைத்து விளம்பரம் தேடி கொள்கின்றவர்கள் தான் இந்த சூர்யா – ஜோதிகா தம்பதியர் என்கிற விமர்சனம் கூட பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஜோதிகா பேசிய பின்பு எழுந்த விமர்சனத்தை மறைக்க தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உதவிக்கரம் நீட்டியது கூட விளம்பர யுக்தி தான் என கூறப்பட்டது. அதே போன்று ஜெய்பீம் படம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பிய போது. அந்த கதையின் உண்மை கதாபாத்திரமான பார்வதி அம்மாள் அவர்களுக்கு உதவி செய்து எதிர் விமர்சனத்தை முறியடிக்க நினைத்த சூர்யாவுக்கு இந்த அந்தயுக்தி கை கொடுக்க வில்லை என்றே கூறப்படுகிறது.
காரணம் வட மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் நடிகர் சூர்யாவுக்கு எதிராக கடும் எதிர்ப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணித்தவன் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில். ஜெய்பீம் பிரச்சனையால் சூர்யா படத்தை புறக்கணிப்போம் என ஒரு குறிப்பிட்ட சமூக கடும் எதிப்பு தெரிவித்து வரும் நிலையில். சூர்யா புதிய படத்தின் பாடல் வெளியீடு , டீசர் என தொடர்ந்து வெளியிட்டாலும் மக்கள் மத்தியில் புதிய படத்துக்கு வரவேற்பு இல்லை.
இந்நிலையில் தற்போது தனது டிவீட்டர் பக்கத்தில் தனது அகரம் அறக்கட்டளை வழியாக ஒரு ஏழை மாணவி கல்விக்கு உதவி செய்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா இதற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. சூர்யா நடிப்பில் புதிய படம் வெளியாக இருப்பதால், தன் மீது உள்ள எதிர்ப்பை திசை திருப்ப அனுதாப பிச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டார் சூர்யா என விமர்சனம் செய்து வரும் நெட்டிசன்கள் மேலும்.
கடந்த இரண்டு மாதத்தில் எத்தனை பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லை தாங்க முடியாம தற்கொலை செய்து கொண்டார்கள், திண்டுக்கல் பக்கம் சிறு குழந்தை தீயில் கருகிய நிலையில் இறந்து கிடைந்தார், அப்போது எல்லாம் பேச வாய் இல்லாம இருந்தீங்களா சூர்யா.? இல்லை எதாவது படம் வந்தால் தான் பொதுநலம் கல்வி பற்றி பசுவீர்களா.? என்றும்,இல்லாதவங்களுக்கு உதவி பன்னா சொல்லிகாட்ட கூடாதுனு சொல்லுவாங்க ..ஆனா இவர் சொல்லி காட்டவே உதவி செய்வார் போல என சூர்யாவின் இந்த வீடியோ பதிவுக்கு நெட்டிசன்கள் பதிலளித்து வருகின்றனர்.