கடந்த அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மரணம் குறித்து பொங்கி எழுந்த நடிகர் சூர்யா அப்போது தெரிவித்ததாவது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில், இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த காவலர்களின் ‘லாக்கப் அத்துமீறல்’ காவல் துறையின் மாண்பை குறைக்கும் செயல். ‘இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம்’ என கடந்து சென்றிட முடியாது.
இருவரின் மரணமும் ஒருவேளை நிகழாமல் போயிருந்தால், போலீசாரின் இந்தக் கொடூர தாக்குதல் நம் கவனம் பெறாமலேயே போயிருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தாலும், ‘போலீசாரை எதிர்த்தால் என்ன நடக்கும்’ என்பதற்கான வாழும் சாட்சியாகிவே அவர்கள் இருப்பார்கள். தங்கள் மரணத்தின் மூலம் தந்தை, மகன் ஆகிய இருவரும் இந்தச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிவிட்டு இருக்கிறார்கள்.
இந்த கொடூர மரணத்தின் போது தங்களுடைய கடமையை தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதேபோல, ‘தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது’ என்ற நம்பிக்கையை அரசாங்கமும், நீதி அமைப்பும் மக்களிடம் உருவாக்கிட வேண்டும். மாறாக, ‘அதிகார அமைப்புகள்’ அவநம்பிக்கையை தான் ஏற்படுத்துகின்றன.
அதிகார அத்துமீறல் வன்முறைகளால் ஒருபோதும் மக்களின் மனதினை வென்றிட முடியாது. அன்பும், அக்கறையும் கொண்டு தன் கடமையை செய்கிற நல்ல காவல்துறையினரே மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். குற்றம் இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு ‘நீதி நிலைநிறுத்தப்படும்’ என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன் என்று நடிகர் சூர்யா சாத்தான்குளம் மரணம் குறித்து பொங்கி எழுதிருந்தார்.
ஆனால் தற்போது முதுகளத்தூர் மணிகண்டன் மர்ம மரணம் குறித்து இதுவரை வாய் திறக்காத நடிகர் சூர்யா கன்டனம் தெரிவிக்க வேண்டும் என்றால் ஓன்று அது திமுக ஆட்சியில் இல்லாமல் இருக்க வேண்டும், அல்லது இறந்தவர் பெரும்பான்மை மாதமாக இருக்க கூடாது அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகமாக இருந்தால் தான் நீதியை நிலைநாட்ட நடிகர் சூர்யா குரல் கொடுப்பாரா என பொது தளத்தில் கேள்வி எழுந்துள்ளது.