வணங்கான் படத்தில் பாலா – சூர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த படத்தில் இருந்து சூர்யா விளக்கினார். எவ்வளவோ முயன்றும் பாலாவும் சூர்யாவும் மீண்டும் வணங்கான் படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றிய முடியாமல் போனது. இந்த நிலையில் சூர்யாவுக்கு பதில் தற்போது அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வருகிறார் பாலா.
ஆனால் பாலா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வணங்கான் படத்தில் இருந்து வெளியான சூர்யாவுக்கு, நிச்சயம் பாலா மீது ஏதோ ஒரு வகையில் வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் தாண்டி பாலாவின் 25-வது ஆண்டு சினிமா திரைப்பயணம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, பாலாவை புகழ்ந்து சூர்யா பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
குறிப்பாக வணங்கான் படத்தை சூர்யா தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரித்தார். அந்த வகையில் சூர்யாவை வைத்து பாலா இயக்கிய வனங்கான் படத்திற்கு சில கோடிகள் சூர்யா செலவு செய்திருந்தார். இந்த படத்தை அப்படியே வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம், வேறு ஒரு நடிகர் நடிக்கும் பொழுது, இதற்கு முன்பு சூர்யா செலவு செய்த எந்த பணமும் எனக்கு வேண்டாம் என்று பாலாவிற்காக அமைதியாக கடந்து சென்று விட்டார் சூர்யா.
இதற்கு காரணம் என்னதான் பாலா மீது சூர்யாவிற்கு மோதல் ஏற்பட்டாலும் கூட, தனக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்த பாலா மீது, அன்பும் மரியாதை இருக்கு என்பதை நிரூபிக்கும் வகையில் பாலாவின் 25வது வருட கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டார் சூர்யா என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்திற்கு பின்பு சூர்யா மீது கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் பொதுமக்கள் மத்தியிலும் சரி, சினிமா வட்டாரங்களிலும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
அந்த வகையில் பாலாவின் 25 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தில் சூர்யா கலந்து கொள்வதில் மூலம், தன் மீது இருக்கக்கூடிய எதிர்மறை விமர்சனங்கள் நேர்மறை விமர்சனங்களாக மாறும் என்கின்ற ஒரு நோக்கத்தில் கூட, சூர்யா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இதில் சூர்யாவின் சுயநலமும் இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
காரணம் ஏற்கனவே சூர்யா மீது கடுமையான எதிர்மறை விமர்சனம் இருந்து வரும் நிலையில், பாலாவின் 25 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தில் சூர்யா போகாமல் புறக்கணித்து இருந்தால், சூர்யா இன்னும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பார். சூர்யாவிற்கு வாழ்க்கை கொடுத்த பாலாவிற்கு நன்றி விசுவாசம் இல்லாமல் சூர்யா நடந்து கொண்டாரே என்கின்ற கடுமையான விமர்சனம் வந்திருக்கும்.
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு கூட சூர்யா பாலாவின் 25 ஆவது ஆண்டு திரையில் கொண்டாட்டத்தை தவிர்க்க முடியாமல் கலந்து கொண்டிருக்கலாம் , மேலும் ஏற்கனவே சூர்யாவின் இமேஜ் மிக பெரிய அளவில் டேமேஜ் ஆகி இருக்கும் நிலையில், பாலா நிகழ்வில் சூர்யா கலந்து கொள்வதின் மூலம், பாலா மீதுகருத்து வேறுபாடு இருந்தாலும் அதையெல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் சூர்யாநன்றி உணர்வோடு இருக்கிறார் என்கிற தன்னுடைய டேமேஜ் ஆனாஇமேஜை சரி செய்ய தான் சூர்யா இந்த நிகழ்வில் கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.