சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றி கொடி நாட்டி வெற்றி நடைபோட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன், மெரினா படத்தில் இயக்குனர் பாண்டியராஜன் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமான சிவகார்த்திகேயன், தொடர்ந்து பாண்டியராஜன் இயக்கத்தில் கேடி பில்லா கேலடி ரங்கா திரைப்படத்தில் நடிகர் விமல் உடன் இணைத்து நடித்தார், இந்த படத்துக்கு பின் நடிகர் தனுஷ் தயாரிப்பில் எதிர்நிச்சல் படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்த சிவகார்த்திகேயன் அடுத்து வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.
இதன் பின் அவர் நடித்த மான் கராத்தே, காக்கி சட்டை போன்ற படங்கள் சரி வர போகவில்லை என்றாலும் அடுத்து வந்த ரஜினிமுருகன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது, இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் சம்பளமும் கிடு கிடுவென உயர்ந்தது, இந்நிலையில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தால் பெரும் தொகையை சம்பாரித்து விடலாம் என நினைத்து தயாரிப்பு அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன், தொடர்ந்து பல படங்களை சொந்தமாக தயாரித்தார்.
சிவகார்த்திகேயன் SK ப்ரோடேஷன் என தனியாக தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்தாலும், 24AM ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பாட்னர் என சினிமா வட்டாரத்தில் கூறபடுகிறது. இந்நிலையில் 24AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ, வேலைக்காரன் மற்றும் சீமராஜா ஆகிய மூன்று படங்கள் படுதோல்வி அடைந்து பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது இதனால் பெரும் கடன் சுமை இந்த 24AM ஸ்டூடியோ நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் கடனை மொத்தமும் சிவகார்த்திகேயன் தலையில் சுமத்திவிட்டு அந்த நிறுவனத்தின் மற்றறொரு பட்னர் தப்பித்து கொண்டுள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் சொந்தமான SK ப்ரொடக்ஷன் தயாரிப்பில், டாக்டர், மற்றும் டான் போன்ற படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கிறது. அதில் ஒரு படம் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகவும் மற்றொரு படம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடும் கடன்சுமையில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் கடும் நெருக்கடியை கொடுக்க தொடங்கியதும் என்ன செய்வது என தெரியாமல் சினிமாவில் சம்பாரித்த சொத்துக்களை விற்றும் மற்றும் தான் குடியிருக்கும் வீட்டை அடமானம் வைத்தும் கடனை அடைக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் கதறி அழ தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடன் சுமையால் கடும் நெருக்கடியில் இருந்த சிவகார்த்திகேயன் , பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான தயாரிப்பில் தொடர்ந்து 5 படங்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி அதில் ஒப்பந்தம் செய்து முன்பணமாக பெற்ற அந்த தொகையில் ஒரு அளவு கடனை கட்டியுள்ள சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து தனது படம் வெளியானதும் மீதி பணத்தை கட்டிவிடுவதாக கடன் பெற்றவர்களிடம் உறுதியளித்துள்ளார், இதனை தொடர்ந்து அவருடைய சொத்துக்களை ஏதும் விற்காமல் காப்பாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன் என சினிமா வட்டாரத்தில் கூறபடுகிறது.