சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றி கொடி நாட்டி வெற்றி நடைபோட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன், மெரினா படத்தில் இயக்குனர் பாண்டியராஜன் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமான சிவகார்த்திகேயன், தொடர்ந்து பாண்டியராஜன் இயக்கத்தில் கேடி பில்லா கேலடி ரங்கா திரைப்படத்தில் நடிகர் விமல் உடன் இணைத்து நடித்தார், இந்த படத்துக்கு பின் நடிகர் தனுஷ் தயாரிப்பில் எதிர்நிச்சல் படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்த சிவகார்த்திகேயன் அடுத்து வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.
இதன் பின் அவர் நடித்த மான் கராத்தே, காக்கி சட்டை போன்ற படங்கள் சரி வர போகவில்லை என்றாலும் அடுத்து வந்த ரஜினிமுருகன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது, இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் சம்பளமும் கிடு கிடுவென உயர்ந்தது, இந்நிலையில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தால் பெரும் தொகையை சம்பாரித்து விடலாம் என நினைத்து தயாரிப்பு அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன், சீமராஜா படத்தை தயாரித்து நடித்திருந்தார்.
இந்த படம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து பெரும் தொகை செலவு செய்து படம் எடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் கடனில் மூழ்கினர், இதனை தொடர்ந்து தயாரிப்பு தொழிலை கைவிட்ட சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று படங்கள் நடித்து அதில் பெற்ற சம்பளத்தை வைத்து கடனை அடைத்து தற்போது தான் மெல்ல மீண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் தான் தயாரித்த ஒரு படம் பெரும் நட்டம் ஏற்பட்டதும், நடிகர் விஷால் போன்று அடுத்தடுத்து படம் தயாரித்து பெரும் நஷ்டம் அடையாமல்,
சுதாரித்து கொண்ட சிவகார்த்திகேயன் தயாரிப்பு தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தொடர்ந்து நடித்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து கடனை காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போன்று நடிகர் தனுஷ் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடக்கி, ஆரம்பத்தில் ஒரு சில படங்கள் அவருக்கு நல்ல லாபத்தை ஈட்டு தந்தாலும் அடுத்தடுத்து தொடர்ந்து அவர் தயாரித்த படங்கள் படு தோல்வி அடைந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு, நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார், ஆனால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் அடைந்த பெரும் நஷ்டத்தை ஈடு செய்ய தனது மாமனார் ரஜினிகாந்த் உதவியுடன் காலா படத்தை தயாரித்து ஒரு அளவு ஈடு செய்ததாக கூறபடுகிறது, இந்த படத்தில் ரஜினிகாந்த் சம்பளம் வாங்காமல் தனுஷுக்கு நடித்து கொடுத்ததாக கூறப்பட்டது. மேலும் சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்கள் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் தயாரிப்பு துறையை கையில் எடுத்து பெரும் நஷ்டத்தை சாதித்தது, இதெல்லாம் இவர்களுக்கு தேவையா என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருவது குறிப்படத்தக்கது. மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .