சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக மார்க்கெட்டை இழந்து சினிமாவில் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கியவர் நடிகர் சிலம்பரசன். இந்த நிலையில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு படம் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து, ஒரே படத்தில் கடந்த பத்து வருடத்தில் வீழ்ந்த அவருடைய மார்க்கெட்டை மீட்டு எடுத்தார் நடிகர் சிலம்பரசன்.
இந்நிலையில் சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் வெந்து தணிந்தது காடு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளத. சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. டீசர் முழுவதும் இயக்குனர் கௌதம் மேனன் வாய்ஸ் ஓவர் அதிக அளவில் இடம் பெற்று இருந்தது.
டீசரிலே இந்த அளவுக்கு கௌத மேனன் வாய்ஸ் ஓவர் இருக்குமெனில் திரைப்படத்தில் இதைவிட அதிகமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது, ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் படத்தில் கெளதம் மேனன் வாய்ஸ் அதிகமாக இடம்பெற்றது அந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
வெந்து தணிந்தது காடு படம் இரண்டு பார்ட்டாகவும், அதில் தற்பொழுது வெளியாக இருக்கும் படம் மூன்று மணி நேரம் நீளம். இது படத்திற்கான மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கின்றனர் சினிமா துறையின். இந்நிலையில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் வெளியீட்டு விழாவிற்காக சுமார் மூன்று மணி நேரத்திற்கு 2.5 லட்சம் ரூபாய் வாடகைக்கு ஹெலிகாப்டர் ஒன்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வாடகைக்கு எடுத்துள்ளார்.
வெந்து தணிந்தது காடு டீசர் வெளியீட்டு விழாவிற்கு நடிகர் சிலம்பரசன் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வருவது போன்று திட்டமிட்டிருந்தார் அந்த படத்தின் இயக்குனர். ஆனால் இதற்கு நடிகர் சிம்பு ஒப்புக்கொள்ளவில்லை. ஹெலிகாப்டரில் இறங்கி வருவதெல்லாம் எனக்கே கொஞ்சம் ஓவராக தெரிகிறது. மேலும் இது தமிழ் சினிமாவுக்கு இது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என தெரிவித்த சிம்பு.
அடுத்தடுத்து டீசர் வெளியீட்டு விழாவின்போது என்னை பின்பற்றி, அந்த படத்தின் நடிகர்கள் தயாரிப்பாளர்களிடம் தங்களுக்கும் ஹெலிகாப்டர் வேண்டும் என கேட்டுக்கொண்டால் அந்த தயாரிப்பாளர்களுக்கு மன கஷ்டம் ஏற்படும், அதனால் ஹெலிகாப்டரில் ஏற மறுத்துள்ளார் சிலம்பரசன். இந்நிலையில், சுமார் 2.5 லட்சம் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஹெலிகாப்டரில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தனது குடும்பத்தினரை அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வைத்து டீசர் வெளியீட்டு விழாவிற்கு அழைத்து வந்துள்ளார்.