அடங்கொப்புரான… ஐயா அறிவிஜீவி… கமல்ஹாசனை வெச்சு செஞ்ச மாரி செல்வராஜ்…

0
Follow on Google News

சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வெளியான தேவர் மகன் திரைப்படம் தற்பொழுது மிக பெரிய விவாத பொருளக மாறியுள்ளது, இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் மாரி செல்வராஜ், கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் குறித்து பேசிய பேச்சு தான். இந்நிலையில் இதற்கு முன்பு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உன்னை போல் ஒருவன் படம் குறித்து கமல்ஹாசனுக்கு எழுதிய கடிதத்தில் மாரி செல்வராஜ் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அந்த கடிதத்தில் உன்னை போல் ஒருவன் படத்தை பற்றி மாரி செல்வராஜ் தெரிவிக்கையில், “உன்னைபோல் ஒருவன்” எப்போதும்போல கடன் வாங்கிய உங்கள் சீர்திருத்த மதியை வைத்து மறுபடியும் தமிழ் மக்களுக்கு ஒரு நாசகார சதியை கற்பிக்கும் ஒரு முயற்சி… மனிதாபிமானம், கொலைக்கு கொலையே தீர்வு, பிறமொழிகாரனையும் நேசிப்பது.

அடேயப்பா… உங்கள் மனிதாபிமானத்தை தூக்கி தமிழக அரசின் புகார் பெட்டியில்தான் போடவேண்டும். மனிதாபிமானம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கே அருகதையற்ற சினிமா நடிகர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறத்துவிடாதீர்கள். வெண்மனி, கொடியன்குளம், மேலவளவு, ஆழ்வார்கற்குளம், தாமிரபரணி இதையெல்லாம் கூட விட்டுவிடுங்கள் ஈழத்தில் உன் மொழி பேசும் உன் சகோதரன் கொத்து கொத்தாய் செத்து மடிந்தபோது என்ன செய்து கிழித்துவிட்டீர்கள் என் மனிதாபிமான காவலரே!

ஆமாம் அது என்ன வசனம்… பம்பாய்ல எவனுக்கு என்ன நடந்தாலும் நாம இங்க சும்மா இருப்போம். நமக்கென்ன அதைப்பற்றி கவலை அவன் என்ன நம் மொழியா பேசுகிறான் இல்லை நம் சொந்தகாரனா… அடங்கொப்புரான… ஐயா அறிவிஜீவி! தாமிரபரணியில் பச்சை குழந்தையோடு சேர்த்து பதினேழு பேர் பிணமா மிதந்த போது ஏற்கனவே வரலாற்று பிழைக்காக சுட்டுக்கொள்ளப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை சுட்டுகொள்ள பூனூலோடு புறப்பட்டவர் தானே சினிமாவில் நீங்கள்…….அப்புறம் என்ன?

கொலைக்கு கொலைதான் தீர்வா, குடிச்சுப்புட்டு தன் கவுரவத்துக்காக இருபது பேர் சாக காரணமாக இருந்த விருமாண்டிக்கு தூக்கு தண்டனை கொடுக்ககூடாது என்று சொன்ன நீங்கள் ஒரு சிறுபான்மை சமூகத்திற்காக அதன் சமூக நீதிக்காக அறியாமையின் காரணமாக வன்முறையை தேர்ந்தெடுத்து தன் வாழ்வை பணையமாக வைத்து பழிக்கு பழிவாங்கியவர்களை நீதிமன்றமே தண்டனை கொடுத்தாலும் அவர்களை கடத்தி வந்து குண்டு வைத்துதான் கொலை செய்ய வேண்டுமா?

“வாழ்க உங்கள் ஆரிய ஜனநாயகம்” நீங்கள் சொன்னதுபோல் எந்த ஒரு மனிதாபிமான குப்பனும் சுப்பனும் இந்த காரியத்தை செய்யத்தான் மாட்டான் மிஸ்டர் களவானி காமன்மேன் கமல் அவர்களே உங்களின் ஆரிய முற்போக்கு அறிவின் அடிப்படையில் சமூக போராளிகள் பொறுக்கிக்கு பிறந்தவர்கள் என்ற மோசமான அருவருப்பான கருத்தை நீங்கள் சொல்வதற்க்க்காக ”துரோக்கால்” என்ற படம் வரும்வரை காத்திருந்தது ஏன்?

அதே போல் ஆரிய மனிதாபிமான கோபத்தை வெளிப்படுத்த ”வெட்னஸ்டே”வரும்வரை காத்திருந்தது ஏன்? என சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனை நோக்கி சரமாரியாக மாரி செல்வராஜ் கடிதம் மூலம் கடுமையாக தாக்கி தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் படத்தை பற்றி பேசிய சர்ச்சையை ஏற்படுத்திய மாரி செல்வராஜ், சில வருடங்களுக்கு முன்பே கமல்ஹாசனை வெச்சு செய்தவர் செய்த்தவர் என அவர் கமல்ஹாசனுக்கு எழுதிய கடிதம் தற்பொழுது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.