அமெரிக்காவில் இந்திய குடும்பத்தில் பிறந்த நடிகை பூஜாகுமார், அந்த நாட்டில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கேற்று மிஸ் அமெரிக்க இந்தியாஎன்ற பட்டத்தை பெற்றார். இதன்பின் அமெரிக்காவில் பல படங்களில் நடித்தவர், ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளிலும் நடித்தார். தமிழில் 1999ல் காதல் ரோஜாவே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூஜா குமார், பின் நீண்ட இடைவெளிக்குப் பின்பு மீண்டும் தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் நடித்தார்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்தார், தமிழில் விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் போன்ற படங்களில் தொடர்ந்து கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து நடித்த பூஜா குமார், இந்நிலையில் தொடர்ந்து கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்த பூஜாகுமார் பொது வெளியிலும் கமல்ஹாசனுடன் ஜோடியாக தென்பட்டார் மற்றும் வெளிநாடுகளில் ஜோடியாக தென்பட்டார் பூஜாகுமார்.
இதனைத்தொடர்ந்து இருவருக்கும் இடையில் காதல் கிசுகிசுக்கப்பட்டது, இதை இருவரும் மறுக்கவில்லை, மேலும் பூஜா குமாருடன் நடிகர் கமல்ஹாசன் நெருக்கமாக இருப்பதால் தான் நீண்ட வருடங்களாக கமல்ஹாசன் உடன் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்ப நடத்தி வந்த நடிகை கௌதமி அவரை விட்டு பிரிய காரணம் என கூறப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் குடும்ப புகைப்படத்திலும் நடிகை பூஜா குமார் இடம்பெற்றார்.
இந்நிலையில் நடிகை பூஜா குமாருக்கு பெண் குழந்தை பிறந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பூஜாகுமார் திருமணம் செய்துவிட்டாரா.? அவரது கணவர் யார் என்கிற குழப்பம் பெரும்பாலனவர்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில், அவரது கணவர் விசால் ஜோஷி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடிகை பூஜாகுமார் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவர் மேலும் கூறியதாவது.
ஒரு காலத்தில் நாங்கள் இருவராக இருந்தோம், இப்போது நாங்கள் மூன்று பேராக மாறியுள்ளார், பூஜாவும் நானும் எங்கள் பெண் குழந்தை நவ்யாவை உங்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம், நான் கனவு காணக் கூடிய சிறந்த வாழ்க்கை துணையாக பூஜா குமார் இருக்க எங்கள் குழந்தை நவ்யா துணையாக இருக்கும் என்றவர், நவ்யாவை இந்த உலகிற்கு கொண்டு வந்தமைக்கு இறைவனுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .