ஏழு வருட சப் இன்ஸ்பெக்டர் வேலையை விட்டு ஏன் வெளியேறினார் பயில்வான் தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல சினிமா நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நடிகர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களிடம் பாதுகாவலராக பணியாற்றியிருக்கிறேன். சுமார் ஏழு வருடம் எம்ஜிஆர் உடன் வாழ்ந்திருக்கிறேன்.

நான் சினிமாவில் நடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை, எம்ஜிஆர் அவர்கள் தான் என்னை சினிமாவில் நடிக்க வைத்தார். அதே போன்று யூ ட்யூப் சேனல்களில் நான் பேசுவேன் என்றும் எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் எதார்த்தமாக நான் யூ டியூப் சேனல்களில் பேசினேன். ஆனால் அது அதிக வீயூஸ் சென்றதும் பல யூ டுயூப் சேனல்கள் என்னிடம் வந்து காசு தருகிறோம், எங்கள் சேனலில் பேசுங்க என அழைத்தார்கள்.

நான் சினிமாவில் சம்பாதித்ததை விட யூடியூப் சேனலில் அதிகம் சம்பாதிக்கிறேன். ஆனால் நான் பொய் பேசுவது கிடையாது, சினிமாவில் நான் நடிகன் என்பதால் எனக்கு யாரும் பொண்ணு தரவில்லை, அப்படி சினிமாவைப் பற்றி தவறான கண்ணோட்டம் மக்கள் மத்தியில் உள்ளது. அதனால் தான் தவறுகளை சுட்டிக்காட்டி சினிமாவை திருத்துவதற்கான வழியை நான் செய்து கொண்டிருக்கிறேன்.

என்னை குறை சொல்ல யாருக்கும் தகுதி இல்லை. தெலுங்கு நடிகர்கள் என்.டி.ஆர் மற்றும் சோபன் பாபு ஆகியோருடனும் சண்டைபோட்டு உள்ளேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என ரஜினி உட்பட அனைவரும் சொன்ன போது, நான் வரமாட்டார் வரமாட்டார் என்று தொடர்ந்து பேசி வந்தேன் தற்போது அவர் வரவில்லை. அதனால் உண்மையை மட்டும் தான் பேசுவேன்.

என்னைப் பற்றி பலருக்கு தெரியாத விஷயம், 1967 ஆம் ஆண்டு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பளு தூக்கும் போட்டியில் முதல் பரிசு வாங்கி சப் இன்ஸ்பெக்டராக வாய்ப்பு கிடைத்தது. ஏழு வருடம் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த நான், போலீஸ் ட்ரைனிங்கில் என்னிடம் சட்டப்படி எப்படி பேச வேண்டும் என்று சட்டமும் கற்றுக் கொடுத்தார்கள். அதனால் எனக்கு சட்டமும் தெரியும், என்பதால் நான் பேசுவதில் எந்த தவறும் கிடையாது என பேசிய பயில்வான், கடைசி வரைக்கும் எதற்க்காக சப் இன்ஸ்பெக்டர் வேலையில் இருந்து விலகினார் என அவர் தெரிவிக்கவில்லை.

ரஜினியை சிக்க வைத்த இரண்டு மகள்கள்…. அன்புச்செழியன் விவகாரத்தில் என்ன நடந்தது தெரியுமா.?