இயங்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தற்போது வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ருத்ரதாண்டவம், மதமாற்றம், தவறாக பயன்படுத்தப்படும் PCR சட்டம், குறிப்பாக இன்றைய தலைமுறையினர் போதை பொருளுக்கு அடிமையாக இருப்பது குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படமாக ருத்ரதாண்டவம் அமைந்துள்ளது அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
நச்சத்திர நடிகர்கள் திரைப்படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாடட்டம் என இது வரை இருந்த ஒரு பின்பத்தை உடைத்து படத்தின் இயக்குனர் மீது உள்ள நம்பிக்கையில் நேற்று படம் வெளியான திரையரக்குகளில் மக்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டம் என திருவிழா போன்று காட்சியளித்தது, இது தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்கள், இயக்குனர்கள் என அனைவரையும் வியந்து பார்க்க வைத்தது.
நேற்று படம் வெளியான நிலையில் படம் பார்த்த அனைவரும் படத்தை பாராட்டி வரும் நிலையில், படத்தின் ஒவ்வொரு கட்சியும் பொது தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது, இதனை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் தொடர்ந்து இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து வரும் நிலையில், நடிகர் அஜித் குமார் மனைவி ஷாலினி இந்த படத்தை நேற்று திரையரக்குகளில் பார்த்து ரசித்தார், இந்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட், ஹாலினிக்கு தம்பி முறை என்பது குறிப்பிடதக்கது.
இதற்கு முன் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி படம் வெளியான போதும் ஷாலினி திரையில் வந்து பார்த்திருந்தார், இந்நிலையில் நேற்று ஷாலினி ருத்ரதாண்டவம் படம் பார்த்து வீடு திரும்பியவர் தனது கணவரிடம் படத்தை பற்றி எடுத்து கூறியுள்ளார். இதை கேட்ட நடிகர் அஜித் குமார் உடனே ருத்ரதாண்டவம் படத்தின் இயக்குனர் மோகன் ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வை சற்றும் எதிர்பார்க்காத மோகன் ஜி, சார் ரெம்ப நன்றி சார், நான் எதிர்பார்க்கவே இல்லை என்னை தொலைபேசியில் நீங்க தொடர்பு கொள்வீர்கள் என பேசிய மோகன் ஜிக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில், என்ன மோகன் சார் அடுத்த நம்ம சேர்ந்த படம் பண்ணுவமோ என அஜித் கேட்க, சார் பண்ணலாம் சார் என மோகன் ஜி தெரிவித்துள்ளார், உடனே அஜித், ஓகே கதையை தயார் செய்து விட்டு தகவல் சொல்லுங்க நேரில் சந்தித்து இது குறித்து பேசுவோம் என தெரிவித்த நடிகர் அஜித்.
மீண்டும் ஒருமுறை ருத்ரதாண்டவம் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்க இருக்கும் படத்தின் கதை தமிழ்நாட்டுக்குள் சுருங்கி விடாமல் தேசிய அளவில் நடக்கும் ஒரு பிரச்சனையை மையமாக கொண்டு கதையை உருவாக்க இருப்பதாகவும், இது அணைத்து மொழிகளிலும் வெளியிட்டு இந்தியா அளவில் பேசும் படமாக இருக்க வேண்டும் என்பதே இயக்குனர் மோகன் ஜி திட்டம் என கூறப்படுகிறது.