லொடுக்கு பாண்டியாக சினிமா மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த காமெடி நடிகர் கருணாஸ், தொடர்ந்து நகைசுவை நடிகராக பல படங்களில் நடித்தார், ஆனால் இவர் வடிவேலு, சூரி, விவேக் போன்ற நகைசுவை நடிகர் போன்று ஒரு உயர்ந்த இடத்துக்கு செல்ல முடியவில்லை இதனை தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார் கருணாஸ், பின்னணி பாடகி ரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அரசியல் நுழைந்து புதிய கட்சி தொடங்கி அதிமுக தயவில் 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். சட்டமன்ற உறுப்பினரான பின் கை மற்றும் கழுத்தில் தங்க நகைகள், தன்னை சுற்றி ஒரு கூட்டம் என அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான் என்கிற பழமொழிக்கு ஏற்ப ஓவர் ஆட்டம் போட்டார் கருணாஸ், ஒரு கட்டத்தில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை பயன்படுத்தி கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டு நல்ல வருமானம் பார்த்தார் என்று கூறபடுகிறது.
கருணாஸ் அதிமுகவில் சீட் கிடைப்பதற்கு முக்கிய காரணம் சசிகலா தான் ஜெயலலிதாவிடம் பேசி வாங்கி தந்தார் என கூறப்படுகிறது. தேர்தல் செலவுக்கு என கருணாஸ்க்கு 2016 சட்டசபை தேர்தலின் பொது அதிமுகவில் இருந்து நிதி கொடுக்கப்பட்டுள்ளது, பின் ஜெ மறைவுக்கு பின் நடந்த கூவந்தூர் சம்பவத்தின் போது சசிகலா தரப்பில் இருந்து கருணாஸ் எதிரணிக்கு போகாமல் இருக்க ஒரு பெரும் தொகை கொடுக்கப்பட்டதாக கூறபடுகிறது.
இதனை தொடர்ந்து அந்த பணத்தை வைத்து தங்கும் விடுதி, மனைவி பெயரில் சூப்பர் மார்க்கெட் என முதலீடு செய்ய தொடக்கி விட்டார் கருணாஸ், இந்நிலையில் ஒரு நாளைக்கு சரக்குக்கு ஒரு லட்சம் செலவு பண்றோம். வர்றவன் போறவனுக்கு பிரியாணி ஆக்கி போடுதற்கு அவ்வளவு செலவு பண்றோம் தெரியுமா என அரசியலில் இருக்கும் போது பேசிய கருணாஸ் தற்போது சோத்துக்கு கூட மிகவும் கஷ்டப்படுவதாக செய்திகள் வெளியானது.
இது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய கருணாஸ் எவண்டா சொன்னது எனக்கு சோத்துக்கு வழியில்லை என்று, எனது சொத்து மதிப்பு என்ன என்று தெரியுமா.? என்னுடைய ஒரு நாள் வருமானம் என்ன என்பது தெரியுமா.? என ஆவேசமாக பேசிய கருணாஸ், நான் ஆயிரம் பேருக்கு சோறு போடுவேன், எனக்கு சொத்துக்கு வழியில்லையா என தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆவேசமாக பேசியதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.