மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் பிறந்தவர் தாவூத் இப்ராஹிம் தந்தை இப்ராஹிம் கஸ்கர் மும்பை காவல் துறையில் ஹெட் கான்ஸ்டபிள் பதவியில் வேலை செய்து வந்தவர். அஹம்மது சைலர் மேல்நிலை பள்ளியில் படித்து வந்த தாவூத் இப்ராஹிம் பள்ளி படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. இதற்கு காரணம், தனது பதின் வயதிலேயே தாவூத் திருட்டு வேலைகளில் ஈடுபட துவங்கியது ஆகும்.
பின்னர் பாம்பே கேங்ஸ்டர் பாஷு தாதா எனும் லோக்கல் அர்கனைஸ்டு க்ரைம் சிண்டிகேட்-ல் சேர்ந்து குற்றங்கள் செய்ய துவங்கினார். பிறகு 1970-களில் அந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த வந்து தனக்கென ஒரு தனி கூட்டத்தை உருவாக்கி கொண்டார் தாவூத். இதில் தனது சகோதரன் ஷபீர் இப்ராஹிம் கஸ்கர்-யும் இணைத்துக் கொண்டார். தனது கூட்டத்தின் மூலம், தங்கம் கடத்துதல், ரியல் எஸ்டேட் மாஃபியா, போதை பொருள், மிரட்டி பணம் பறித்தல் என பல குற்ற செயல்களில் ஈடுப்பட துவங்கினார்.
தாவூத் தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்தல், போதைப்பொருள் கடத்தல், பணமோசடி என தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். 2003ம் ஆண்டு தாவூத் இப்ராஹிம் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தாவூத் கராச்சி, துபாய் மற்றும் இந்தியாவில் ரியல் எஸ்டேட்-ல் பெருமளவு முதலீடு செய்துள்ளதாக அறியப்படுகிறது.
மேலும் 1993 ஆண்டு நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராஹிம். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் பரவி இருக்கும் தாவூத்தின் க்ரைம் சிண்டிகேட் ஈட்டும் வருமானத்தில் 40% இந்தியாவில் இருந்து உருவாகிறது. கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
முக்கியமாக கராச்சியில் பாகிஸ்தானின் அரசு உதவியுடன் தாவூத் தங்கி இருப்பதாக தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அவரை கைது செய்வது அல்லது கொல்வது என இந்தியா சார்பில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால முயற்சிகள் எடுபடவில்லை. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பெண் ஒருவரை தாவூத் இப்ராகிம் இரண்டாவதாக திருமணம் செய்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், கடும் உடல்நலக் குறைவு காரணமாக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தாவூத் இப்ராஹின் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.இந்நிலையில் பத்திரிகையாலர் உமாபதி தனியார் யூட்யூப் சேனல்க்கு, தாவூத் இப்ராஹிம் பாலிவுட்டில் செய்த அட்டூழியங்கள் குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.
அதில் பாலிவுட் சினிமாவில் தாவூத் மிகப்பெரிய தாதாவாக தான் இருந்தார். ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என இப்படி யாருடைய படம் நன்றாக ஓடி வசூல் அதிகமாக எடுத்தால், அடுத்து அவர்கள் தாவுத் கைகாட்டும் தயாரிப்பாளர் படத்தில் தான் நடிக்க வேண்டும். அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அவர்கள் சினிமா வாழ்கை குளோஸ்.
அதேபோன்று பாலிவுட்டில் இருக்கும் நடிகைகளை துபாய்க்கு அழைத்துச் சென்று அங்கு இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு விருந்தாக்குவார். அப்படிதான் அவருக்கு துபாயில் தொடர்பு கிடைத்தது. துபாயில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு இந்திய நடிகைகள் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கும். அதை தாவூத் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
இது போன்று தமிழில் இருந்து பாலிவுட் சென்ற நடிகையை கூட துபாய்க்கு கூப்பிட்டு சென்று உள்ளார் தாவுத் . நான் அவர்களின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை. தாவுத் கூப்பிட்டால் சென்று தான் ஆக வேண்டும். இந்த நிலைதான் பாலிவுட்டில் இருக்கும் அனைத்து நடிகைகளுக்கும் இருந்தது.” என்று பேசியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழில் இருந்து பாலிவூட் சென்று தாவூதால் துபாய்க்கு அனுப்பட்ட அந்த நடிகை யார் என பலரும் விவாதங்களை சமூக வலைத்தளத்தில் நடத்தி வரும் நிலையில் இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.