விஜயை சீண்டும் பாடல் வரிகள்… நெல்சனுக்கு போன் போட்ட விஜய்… என்ன பேசினார் தெரியுமா.?

0
Follow on Google News

சமீப காலமாக நடிகர் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை பரபரப்பாக சென்று கொண்டே இருக்கையில், பற்றி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்று நடிகர் சரத்குமார் உட்பட சில நடிகர்கள் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்பது போன்று பேசி வருவது பின்னணியில், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி எதிர்காலத்தில் தமிழகத்தில் விஜய் முக்கிய இடத்திற்கு வந்தால், அவருடன் ஒட்டிக்கொண்டு நமக்கும் அரசியலில் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா.? என்கின்ற நோக்கில் தான் சிலர் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் என தெரிவித்து மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய வருகிறார்கள் என கூறப்படுகிறது.

அதேபோன்று நடிகர் விஜய்யை தொடர்ந்து புகழ்ந்து வருவதால் விஜய் நடிக்கும் அடுத்த படங்களிலும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக சில நடிகர்கள் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஒரு தரப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் நடிகர் விஜய் ஒருபோதும் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பகிரங்கமாக அவர் தெரிவிக்கவில்லை,

பல மேடைகளில் நான் ரஜினியை பார்த்து சினிமாவுக்கு வந்தவன் நானும் ரஜினி ரசிகன் என விஜய் பேசியதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய்யிடம் நல்ல பெயர் வாங்கி தங்களுக்கான வாய்ப்பை பெற்று அவர் மூலம் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக சில சரத்குமார் போன்ற சில நடிகர்கள் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என கொளுத்தி போடுவதை மிகவும் சீரியஸாக எடுத்து ரசிகர்களுக்குள் சண்டை நடந்தாலும் கூட இன்று தமிழ் திரையுலகின் காட்பாதர் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த விஷயத்தை மிகப் பக்குவமாக கையாண்டு இருக்க வேண்டும்.

ஆனால் தான் நடிக்கும் படங்களில் சூப்பர் ஸ்டார் குறித்த சர்ச்சைக்கு விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ள பாடல் வரிகளை அனுமதித்தது மட்டும் அல்லாமல் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சீண்டுவகையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு ஏற்கனவே ரசிகர்களுக்கு இடையிலான சண்டை மேலும் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சனுக்கு பீஸ்டு படத்தின் மூலம் மிகப் பெரிய வாய்ப்பை கொடுத்தவர் நடிகர் விஜய், பீஸ்ட் படத்தின் வாய்ப்பின் மூலமாகத்தான் அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தற்பொழுது ஜெயிலர் படத்தில் நடிகர் விஜயை சீண்டு வகையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பாடல் வரிகள் இடம்பெற்றது.

இயக்குனர் நெல்சன் விருப்பம் இல்லாமல் நடந்திருக்காது. ஆனாலும் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல், சமீபத்தில் ஜெயிலர் படத்தின் டிரைலரை பார்த்த நடிகர் விஜய் உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு இயக்குனர் நெல்சனை ட்ரெய்லர் மிக அருமையாக வந்திருக்கிறது என பாராட்டியதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை மனதில் வைத்துக் கொள்ளாமல் நெல்சனை தொடர்பு கொண்டு விஜய் பாராட்டியது கூட,

உனக்கு பீஸ்ட் படத்தில் வாய்ப்பு கொடுத்த என்னை உன்னால எவ்ளோ வெச்சு செய்ய முடியுமோ நல்ல ஜெயிலர் படத்தில் வச்சு செஞ்சிட்ட, என மறைமுகமாக நெல்சனுக்கு ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் விஜயின் வாழ்த்து என்பது இருந்திருக்கும் என சினிமா துறையில் பேசப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில்.

ஆனால் ரஜினிகாந்த் மேலும் இருக்கிற பிரச்சனையை மேலும் கொளுத்தி விட்டு எறிவது போல் பேசினார், அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் செய்த அதே தவறை விஜய் செய்ய மாட்டார் நிச்சயம் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவருடைய பேச்சு இருக்கும் என்கின்றனர் சினிமா வட்டாரங்கள்.