அண்ணாத்தே படம் புரோமோஷனுக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா ரஜினிகாந்த்.? உண்மை என்ன.?

0
Follow on Google News

தீடிரென சென்னை காவேரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார், இந்நிலையில் ஒரு தரப்பினர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்தே படத்தின் புரோமோஷனுக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கருத்து தெரிவித்து வருவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ரஜினிகாந்த் மீது உள்ள வெறுப்பின் காரணமாக ஒரு தரப்பினர் இது போன்ற விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கது, உடல் நலமில்லாமல் ரஜினி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. மருத்துவமனையில் உள்ள அவர் விரைவில் நலம் பெற்று திருப்ப வேண்டும் என்பது மட்டுமே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும், இதை விடுத்து அண்ணாத்தே படம் புரோமோஷனுக்காவும் ,படம் வர போகுதுல்ல அதனால் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் என கேலி பேசுவது அபத்தமாக உள்ளது..

மருத்துவமனையில் சேர்ந்து பேசு பொருளாகி தான் தன் படம் ஓட்ட வேண்டும் என்ற அவசியம் ரஜினிக்கு இல்லை, ஏற்கனவே அவரின் மார்கெட் உச்சத்தில் உள்ளது. அனுதாபம் தேடி தான் படம் ஓட்ட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லையே. ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள போதும் அதில் உள்நோக்கம் கற்பிப்பதும் கேலி பேசுவதும் தவறாகபடுகிறது. விமர்சனங்களை முறையான வகையில் சரியான முறையில் வைக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்பார்க்ட் என்பது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போவதை குறிக்கும், ரத்த குழாயில் அடைப்பு, ரத்த பாதை தானாகவே சுருங்குதல், ரத்தகுழாய்க்கு ஏற்படும் வெளிப்புற அழுத்தத்தை குறிக்கும் என்றும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப் பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்த தகவல் ரஜினி ரசிர்கர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும், தொடர்ந்து ரஜினிகாந்த் குணமடைய அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வேகமாக குணமடைந்து வருவதாகவும், ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, ஒரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.