ரஜினிகாந்த் அதிரடி… சினிமாவில் இனி நடிப்பதில்லை … தீடிர் அமெரிக்க பயணம்..! என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

அரை நூற்றான்டுகளாக தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகின்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். என்னடா இந்த குதிரை ஓய்வே இல்லாமல் ஓடி கொண்டே இருக்கிறது என பலருக்கு ஆச்சரியம் என ரஜினிகாந்த் கூட தன்னை பற்றி பேசியிருக்கிறார். 2012ம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த், பின் சிங்கப்பூக்கு அவசர சிகிச்சைக்காக சென்றார்.

ரஜினிகாந்தின் கோடான கோடி ரசிகர்களின் பிராத்தனைக்கு பின்பு, சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துகொண்ட ரஜினிகாந்த் , உடல்நலம் பெற்று வீடு திரும்பினார். இதன் பின்பு சில காலம் ஓய்வில் இருந்து வந்த ரஜினிகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். சிங்கப்பூர் சிகிச்சைக்கு பின்பு இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் குறைந்த நாள் கால் சீட்டில் எடுக்கப்பட்ட படம், தன்னுடைய உடல் நலம் கருதி குறைந்த நாட்கள் மட்டுமே கால் சீட் கொடுத்து வந்தார் ரஜினிகாந்த்.

மேலும் சிங்கப்பூர் சிகிச்சைக்கு பின்பு அடிக்கடி உடல் பரிசோதனைக்காக அமெரிக்க செல்லும் ரஜினிகாந்த், அங்கே தீவிர பரிசோதனைக்கு பின்பு வீடு திரும்புவார். 2012ம் ஆண்டு மறு வாழ்வு பெற்று வந்த ரஜினிகாந்த். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவிய போது, வீட்டிலேயே மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டார். ஏற்கனவே சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று வந்தால், அவரை காப்பாற்றுவது மிக பெரிய சவாலாக இருக்கும் என்பதால், வீட்டிலே மிக பாதுகாப்பாக கண்காணிக்கப்பட்டார் ரஜினிகாந்த்.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்ட ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான படம் அண்ணாத்தே, இந்த படம் முடிந்த உடன் அடுத்து மீண்டும் சன் பிக்சர் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் நடைபெறும் என தகவல் வெளியான நிலையில், தற்பொழுது அந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் நடைபெறுவதர்க்கு சாத்தியம் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் தற்பொழுது உடல் பரிசோதனை செய்வதற்காக இன்னும் சில நாட்களில் அமெரிக்க செல்ல இருக்கும் ரஜினிகாந்த், ஆகஸ்ட் மாதம் தான் திரும்பி வருவார் என கூறப்படுகிறது. மேலும் உடல் பரிசோதனைக்கு பின்பு மருத்துவர்கள் ஆலோசனையை கேட்டு, மீண்டும் சினிமாவில் நடிக்கலாமா.? வேண்டாமா.? என்கிற குழப்பத்தில் இருக்கும் ரஜினிகாந்த், அமெரிக்காவில் உடல் பரிசோதனை செய்து கொண்ட பின்பு மருத்துவர் ஆலோசனைக்கு ஏற்ப ரஜினிகாந்த் முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்த புதிய படத்துக்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி, அந்த படத்தின் இயக்குனர் மற்றும் இசை அமைப்பாளர் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த படத்துக்கான மற்ற எந்த ஒரு வேலையும் நடைபெறவிலை மேலும், ரஜினியின் புதிய படத்துக்கான எந்த ஒரு அப்டேட்ம் வரவில்லை. இதற்கு ரஜினிகாந்த் தான் தன்னுடைய உடல் நலம் கருதி அமெரிக்க சென்று உடல் பரிசோதனை செய்து கொண்ட பின்பு புதிய படத்துக்கான வேலைகளை தொடங்கலாம் என தயாரிப்பு நிறுவனத்திடம் ரஜினிகாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் 71 வயதான ரஜினிகாந்த், அவர் ஒருமுறை பேசியது போன்று என்னடா எந்த குதிரை இத்தனை வருடமாக ஓடி கொண்டிருக்கிறதே என பலரும் ஆச்சரியத்துடன் பார்ப்பதாக பேசினார். அந்த குதிரைக்கு தற்பொழுது ஓய்வு எடுக்கும் நேரம் வந்துவிட்டது என்றும், மேலும் அமெரிக்க செல்ல இருக்கும் ரஜினிகாந்த், சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு ஓய்வில் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் படத்தில் நடிப்பதற்கு மட்டும் ஓய்வு கொடுக்கும் ரஜினிகாந்த், மற்றபடி சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்களை பேசுவார் என்றும், அது அவர் வீட்டிலே இருப்பதால் ஏற்படும் மன உளைச்சலை தடுக்கும் வகையில் இருக்கும் என்பதால் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள இருக்கும் ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பதை உடல் நலம் கருதி இனி நடிப்பதில்லை என சில அதிரடி முடிவுகள் எடுக்க வாய்ப்புங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிக்கிற வேலையை மட்டும் பார்…! மரியாதை இழந்த விஜய் ….ஆணவ திமிரை தலைக்கு ஏற்றிய சிவகார்த்திகேயன்…என்ன நடந்து தெரியுமா.?