ஆட்டத்தை தொடங்கிய லதா..! சுற்றி கடும் நெருக்கடியில் தனுஷ்… சினிமா வாய்ப்புகள் பறிபோகும் அபாயம்..!

0
Follow on Google News

நடிகர் தனுஷ் ஆரம்ப கட்டத்தில் தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும். அடுத்தடுத்து தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுத்து வந்தார். வேறு ஒரு நடிகராக இருந்திருந்தால் தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வி அடைந்தாலே சினிமாவில் காணாமல், போயிருப்பார்கள். ஆனால் ரஜினிகாந்த் மருமகன் என்கிற ஒரே காரணத்தினால் அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

நடிகர் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா ஒரு காலத்தில் முன்னனி இயக்குனராக இருந்தாலும், அவர் காலாவதியான பின்பு தான் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் தனுஷ். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அணைத்து மொழிகளின் சினிமா துறையை சேர்ந்த முக்கிய நபர்களிடம் நெருங்கிய நட்பில் இருந்து வரக்கூடியவர். அந்த வகையில் மருமகன் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்புகளை அமைத்து கொடுத்தவர் லதா.

இந்நிலையில் ஆடுகளம் படத்துக்கு பின்பு தனுஷ் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று, அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்ததில் மூலம் அதன் பின்பு யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாவில் பயணித்து வருகிறார். ஆனால் இடையில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி மிக பெரிய நஷ்டம் ஏற்பட்ட போது கூட மாமனார் ரஜினிகாந்த் உதவியால் மீண்டு வந்தார் தனுஷ். இந்நிலையில் இக்கட்டான சூழலில் யாரால் வளர்ச்சி அடைந்தாரோ அவர்களினால் தற்போது பெரும் நெருக்கடியில் சிக்கும் அபாயத்தில் உள்ளார் தனுஷ்.

கடந்த ஜனவரி 17ம் தேதி தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்த நிலையில் மீண்டும் இவர்களை இணைத்து வைக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். இதில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஐஸ்வர்யா கிழே இறங்கி வந்தாலும் தனுஷ் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், தனுசுக்கு எதிராக தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார் ஐஸ்வர்யா தயார் லதா.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தனுஷ் சினிமா வாய்ப்புகள் கிடைக்காத வகையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்தந்த சினிமா முக்கிய புள்ளிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவை தவிர மற்ற மொழிகளில் தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை தவிர புதியதாக இனி வாய்ப்புகள் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ள நிலையில் தமிழில் முக்கிய சினிமா பைனாசியர்களிடம் தனுஷ் நடிக்கும் படங்களுக்கு கடன் உதவி செய்யவேண்டாம் என லதாவிடம் இருந்து வந்த தகவலை தொடர்ந்து.

பைனாசியர்களும் லதாவுக்கு உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனுஷ் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் முடித்த பின்பு மிக பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என கூறப்படும் நிலையில். ரஜினிகாந்த் மகளுடன் மீண்டும் இணைந்து வாழும் பட்சத்தில் தனுஷ் தப்பித்து கொள்வர். இல்லையென்றால் சினிமாவில் இருந்து பல இயக்குனர்களின் வாரிசு நடிகர் போன்று காணாமல் போய் விடுவார் என கூறப்படுகிறது.

ஒழுங்கா பஸ்சை கூட ஓட்டத் தெரியாத அரசாங்கம் எப்படி ஒரு சமூக மக்களின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் – பேராசிரியர் பேச்சு