நடிக்கிற வேலையை மட்டும் பார்…! மரியாதை இழந்த ரஜினிகாந்த்…. அதிரடி காட்டும் சன் பிக்சர்..!

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடைசியாக வந்த படம் அண்ணாத்தே. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என நட்சத்திர பட்டலாமே நடித்திருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் கொரோனா தொற்று பரவல் காரணமாக படப்பிடிப்பு தடை பட்டது. இதனால் மிக நீண்ட காலமாக படப்பிடிப்பு நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தொற்று குறைவு ஏற்பட்ட உடன் மீண்டும் அண்ணாத்தே படப்பிடிப்பு தொடங்கியது.

இந்நிலையில் மீண்டும் அண்ணாத்தே படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதி, சிகிச்சைக்காக அமெரிக்க பயணம் என ரஜினிகாந்த் இருந்ததால் மேலும் படப்பிடிப்பு முடிவதற்க்கு தாமதமானது. ஒரு வழியாக படம்பிடிப்புகள் முடிந்து தீபாவளி அன்று திரைக்கு வந்தது அண்ணாத்தே படம் குடும்பத்தினர் கொண்டாடும் வகையில் பாராட்டை பெற்றது.

மக்கள் மத்தியில் அண்ணாத்தே வரவேற்பை பெற்று இருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்த படத்தில் நடித்த ரஜினிகாந்த் சம்பளம் மட்டும் 100 கோடி வரை கொடுக்கப்பட்ட நிலையில், இந்த படத்தை தயாரித்த சன் பிக்சர் நிறுவனம் படத்தின் வசூல் ரீதியான தோல்விக்கு காரணம் ரஜினிகாந்த் தான் என் முடிவு செய்து, இந்த படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய மீண்டும் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் நடித்து தரவேண்டும் என வலியுறுத்தியதை தொடர்ந்து புதிய படத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சன் பிக்சர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் இயக்குனராக நெல்சன் மற்றும் இசை அமைப்பாளராக அனிருத் ஆகியோர் முடிவு செய்துள்ள நிலையில், மற்ற நடிகர்களுக்காக தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன் ஆகியோர் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில், இயக்குனர் நெல்சனிடம் சில கோரிக்கைகளை ரஜினிகாந்த் வைத்துள்ளார்.

அதில், வயது குறைவான இளம் நடிகைகள் தனக்கு ஜோடியாக வேண்டாம், வயது அதிகமான ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகைகளை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என ரஜினிகாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை சன் பிக்சர் நிறுவனத்திடம் நெல்சன் தெரிவித்துள்ளார். இதற்கு தயாரிப்பு நிறுவனம் ஐஸ்வர்யா ராய் ஒரு படத்துக்கு 5 கோடி வரை சம்பளம் கேட்பார்,அதனால் ரஜினிகாந்த் சம்பளத்தை குறைத்து கொள்வாரா.?

சம்பளம் 50 லட்சத்துக்குள் இருக்கும் நடிகைகளை புக் செய்யுங்கள், ரஜினிகாந்த் அவர் நடிக்கும் வேலையை மட்டும் பார்த்தால் போதும், அவர் தேவைக்கு படம் எடுக்க வேண்டும் என்றால் சொந்த தயாரிப்பில் எடுத்து கொள்ளட்டும் என இயக்குனரிடம் மிக கட்டமாக சன் பிக்ச்சர் நிறுவனம் தெரிவித்ததாக கூறபடுகிறது. மேலும் கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாதே படம் நஷடம் அடைந்ததால், இந்த படத்தில் சுமார் 20 கோடி வரை சம்பளம் ரஜினிக்கு குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.