ரஜினிகாந்த் எப்போது ஓடுகின்ற குதிரை மேல் ஏறி சவாரி செய்யக்கூடியவர். தோல்வி அடைந்த குதிரையில் ஏறி ரிஸ்க் எடுக்க மாட்டார். அதுபோல் வெற்றி பெற்ற இயக்குனர்கள் படத்தில் தான் அவர் நடிப்பார், அறிமுக இயக்குனர் அல்லது தோல்வியை தழுவிய இயக்குனர் படங்களில் ஒரு போதும் நடிக்க மாட்டார். அப்படி தான் நாட்டாமை மிக பெரிய வெற்றியை பெற்றது அந்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து முத்து படத்தில் நடித்தார்.
அதே போன்று உள்ளத்தை அள்ளித்தா படம் மிக பெரிய வெற்றியை பெற்றதும் அந்த படத்தின் இயக்குனர் சுந்தர் சி யை நேரில் அழைத்து அருணாச்சலம் படத்தில் இணைந்தார். இப்படி வெற்றி பெற்று ஒடி கொண்டிருக்கும் இயக்குனரை ரஜினியே நேரில் அழைத்து ஒரு கதை ரெடி பண்ணுங்க சேர்ந்து படம் பண்ணுவோம் என்பார் ரஜினிகாந்த். அதே போன்று ஒரு படம் தோல்வியை கொடுத்தாலும் அந்த இயக்குனரை கண்டு கொள்ளமாட்டார் ரஜினிகாந்த்.
அப்படி தான் முத்து, படையப்பா என ரஜினிக்கு இரண்டு மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பதற்காக, அதன் பின்பு சுமார் எட்டு வருடங்களாக கே.எஸ்.ரவிக்குமார் எத்தனையோ முறை ரஜினிகாந்தை சந்தித்து கதை சொன்னாலும் இதுவரை கதையை மட்டும் கேட்டுவிட்டு பண்ணலாம் ரவிக்குமார் என வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார் ரஜினிகாந்த்.
அதே போன்று நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது, மேலும் நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படம் இயக்கி வருகிறார், அந்த படமும் வெற்றி படமாக அமையும் என எதிர்ப்பார்க்கபட்ட நிலையில், ரஜினிகாந்தின் புதிய படத்தில் நெல்சனை ஓகே செய்தார் ரஜினிகாந்த், ஆனால் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியுள்ளது.
மேலும் பீஸ்ட் படத்தில் சொல்லும்படி ஏதும் இல்லை. இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினிகாந்த் ரெம்ப அப்செட் ஆனவர் படம் முடிவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பாதியிலே வெளியில் வந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினியின் புதியப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அந்த படத்துக்கான இயக்குனராக நெல்சன் தொடரட்டுமா அல்லது மாற்றலாமா என்பதை ரஜினியின் விருப்பத்துக்கே விட்டுவிடுவதாக ரஜினியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியிடம் இருந்து ஒரு தகவல் நெல்சனுக்கு சென்றுள்ளது, அதில் பீஸ்ட் படம் வெளியான பின்பு அவருடைய மார்க்கெட் நிலவரம் என்ன என்பது அவரே உணர்த்திருப்பார். இந்த சுழலில் மிக பெரிய பட்ஜெட்டில் தற்பொழுது இணைந்து படம் பண்ணுவது சரியாக இருக்காது. டாக்டர் மாதிரி ஒரு வெற்றியை கொடுத்துட்டு வரட்டும் நம்ம சேர்ந்து படம் பண்ணலாம் என நாசுக்காக நெல்சனை கழட்டிவிடுவதாக தகவலை நெல்சனுக்கு முகத்தில் அடிப்பது போன்று அனுப்பியுள்ளார் ரஜினிகாந்த். இந்த தகவலை அறிந்த நெல்சன் சில நிமிடம் கண்கலங்கி விட்டதாக கூறப்படுகிறது.