எனக்கு ரஜினி வாழ்கை கொடுத்தாரா.? ரஜினி குடும்பத்தை கிழித்து தொங்க விட்ட தனுஷ்… அடுத்து நடந்து என்ன.?

0
Follow on Google News

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், இவர்களின் இரண்டு குழந்தைகள் நலன் கருதி பிரிந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து பிரிந்த தம்பதியினரை மீண்டும் இணைந்து வைக்கும் முயற்சியில் இரண்டு குடும்பத்தினரும் ஈடுபட்டனர், இதில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து பிரிந்த தம்பதியினரிடம் ரஜினிகாந்த் குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஐஸ்வர்யா மீண்டும் இணைய சம்மதம் தெரிவித்தும் தனுஷ் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் தீடிரென தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் இணைந்து வைக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு,தனுஷுக்கு எதிராக நெருக்கடி கொடுக்கும் வேலைகளை ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தனுஷ் சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தமிழ் சினிமாவை தனது கட்டுக்குள் வைத்துள்ள பிரபல சினிமா பைனான்சியர் ஒருவர் உதவியுடன் நடிகர் தனுஷ்க்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வரும் லதா ரஜினிகாந்த், மேலும் பிற மொழி படங்களிலும் தனது செல்வாக்கை பயன்படுத்தி தனுஷ் இனி படத்தில் நடிக்காத படி நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், எதற்காக ரஜினிகாந்த் குடும்பத்தினர் இப்படி செய்கிறார்கள் என்கிற தகவலும் கசிந்துள்ளது.

அதாவது தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினரை மீண்டும் இணைந்து வைக்கும் பேச்சுவார்த்தையில் ரஜினிகாந்த் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் சிலர் ஈடுபட்டு வந்த பொது, அப்போது தனுஷிடம் பேசியவர்கள், நீங்களும் உங்க அண்ணன் செல்வராகவனும் சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமாகி ஒரே நேரத்தில் உச்சத்துக்கு சென்றவர்கள், ஆனால் உங்கள் அண்ணன் அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து சினிமாவில் காணமால் போய்விட்டார்.

ஆனால் நீங்கள் தோல்வி படங்களை கொடுத்தாலும் சினிமாவில் நிலைத்து நிற்க காரணமாக இருந்தது உங்கள் மாமனார் ரஜினிகாந்த் செல்வாக்கு தான், இல்லை என்றால் நீங்களும் காணமால் போயிருப்பீர்கள், இப்படி உங்களுக்கு வாழ்க்கை கொடுத்த அவர் விருப்பத்துக்கு ஏற்ப அவர் மகளுடன் நீங்கள் இணைந்து வாழ வேண்டும் என தனுஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் பேசியதாக கூறப்படும் நிலையில், இதை கேட்டு டென்ஷனான தனுஷ்.

என்னாது ரஜினிகாந்த் எனக்கு வாழ்கை கொடுத்தாரா, என்னுடைய அப்பா, அண்ணன் என்னை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்கள் என்னுடைய திறமையால் உச்சத்துக்கு வந்துள்ளேன், நான் ரஜினிகாந்த் மருமகனான இருக்க ஒரு போதும் விரும்பியது கிடையாது, கஸ்தூரி ராஜா மகனாகவே இருக்க விரும்பியவன் என்றும் மேலும் ரஜினிகாந்த் குடும்பத்தினரை மிக கடுமையாக தாக்கி அவர்களிடம் பேசியதாக கூறப்படும் நிலையில்,

ரஜினிகாந்த் குடும்பத்தை கிழித்து தொங்க விட்டு தனுஷ் பேசியதை அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியவர்கள் ரஜினிகாந்த் குடும்பத்தினரிடம் தெரிவிக்க, இதன் பின்பு தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினரை மீண்டும் இணைந்து வைக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு, தனுசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அவருக்கு எதிராக அவருடைய சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி பல நெருக்கடிகளை ரஜினிகாந்த் குடும்பத்தினர் கொடுத்து வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

குஷ்புவை பார்த்து திருந்துவார்களா சூர்யா குடும்பத்தினர்..! சத்தமில்லாமல் என்ன செய்து வருகிறார் குஷ்பு தெரியுமா.?