என்ன பாடுறீங்க… மேடைக்கு வராதீங்க… சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் சர்ச்சை…

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 9 சீசன் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், சீசன் 9 வின்னர் டைட்டிலை அருணா சிவாய தட்டிச் சென்றார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் அருணா சிவாய முதல் பரிசை வென்றுள்ளது குறித்து இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறுகையில்,

‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் இடம்பெற்ற பெரும்புலவன் பாரதியின் பாடலைப் அருணா சிவாய அருமையாகப் பாடினார். இயல்பானத் திறமை கொண்டவர். சங்கீதம் படித்தவரா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் நல்ல இயற்கை ஞானம் உள்ளவர் என்பது தெள்ளத்தெளிவாய் தெரிந்தது. என தெரிவித்த ஜேம்ஸ் வசந்தன், ஆனால், தமிழைக் கொன்று பட்டம் வென்றுள்ளார் என்பது தெரிந்து வேதனையாக இருந்தது.

இன்னும் எத்தனைக் காலந்தான் “நாட்டுப்புறப் பாடகர்கள் கொச்சையாகத்தான் பாடுவார்கள்’ என்று விட்டுக்கொண்டிருக்க முடியும்? என் கேள்வி எழுப்பியுள்ள ஜேம்ஸ் வசந்தன்.. அவர்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்போது அது இயல்பான இசை என சொல்லி அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் அவற்றைக் கடக்கிறோம். இவர் திரைப்படப் பாடல்களைப் பாட முன்வந்திருக்கிறார். அதுவும் ஒரு போட்டித்தளத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இந்தப் பாடல்களிலுள்ள இசை நுணுக்கங்களை அட்சரம் பிசகாமல் பாடக் கற்றுக்கொள்பவருக்கு அவருடைய மொழியின் நுணுக்கம் மட்டும் தெரியாதாமாம். நாமும் அதைக் கண்டுகொள்ளக் கூடாதாம். என தெரிவித்துள்ள ஜேம்ஸ் வசந்தன். என்ன பெரிய நுணுக்கம்? ல, ள, ழ வை வேறு எப்படி உச்சரிக்க முடியும்?
உச்சரிக்க வரவில்லையென்றால் பொதுமேடைக்கு வராதீர்கள், கற்றுக்கொண்டு பிறகு வாருங்கள். என ஆவேசமாக தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன்.

மேலும் வாய்ப்பாட்டு இசை என்பது இசையும் மொழியும் இரண்டறக் கலந்தது. சொற்கள் இல்லாமல் பாடல் இல்லை. அப்படியிருக்க, இசையால் மயக்கி, செவிகளை ஏமாற்றி, நம் மொழியைக் கொன்றுதான் நீங்கள் வெல்லவேண்டுமா? என ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பியுள்ள ஜேம்ஸ் வசந்தன், பாடகர் இப்படியென்றால் அங்கு உட்கார்ந்து தலையாட்டிப் பொம்மை போல ரசித்துக்கொண்டிருந்த மொழிசெவிட்டு நடுவர்கள்தான் பெரிய குற்றவாளிகள்.

அங்கிருந்த ஒரு நட்சத்திர நடுவர் கூட இவர் செய்த பிழைகளைச் சுட்டிக்காட்டவில்லை. மொழி தெரிந்தால்தானே பிழை தெரியும்! இது வேறு எந்த மாநிலத்திலும் நடக்க வாய்ப்பில்லை. இதே சூப்பர் சிங்கர் பாடகர் சிலர் ஹிந்தி நிகழ்ச்சிகளில் சென்று பங்கெடுத்தபோது பிசகின்றி அவர்கள் மொழியைப் பாடியது பாராட்டுக்குரியது. ஆனால் தமிழ் என்றால் நம் பாடகர்களுக்கு அவ்வளவு இளக்காரம். என மிக ஆக்ரோசமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அருணா சிவாய டைட்டில் வின்னர் பெற்றது குறித்து கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

மேலும் ஜேம்ஸ் வசந்தன் இந்த கருத்துக்களை பலரும் வரவேற்று வரும் நிலையில், இன்னும் எத்தனைக் காலந்தான் “நாட்டுப்புறப் பாடகர்கள் கொச்சையாகத்தான் பாடுவார்கள்’ என்று விட்டுக்கொண்டிருக்க முடியும்? என்கிற ஜேம்ஸ் வசந்தன் கருத்தை பலரும் வரவேற்று, போட்டி என்று வந்துவிட்டால், அனைவரையும் ஒரே அளவில் தான் பார்க்க வேண்டும், நாட்டுப்புற பாடகர்கள், கிராமிய பாடகர்கள் என அவர்கள் தமிழ் உச்சரிப்பில் பிழை இருந்தால் சுட்டி காட்டி உண்மையான திறமையாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும்,

இதே போன்று, இதற்கு முன்பு செந்தில் ராஜலட்சுமி தம்பதியினர் பங்கேற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், அவர்களிடம் பிழைகள் இருந்தாலும், கிராமிய பாடகர், கிராமிய பாடகர்களை ஊக்குவிக்கிறோம் என டி ஆர் பி ரேட்டிங்க்காக, இறுதி போட்டி வரை அவர்களை அழைத்து சென்று டைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது என்று அப்போது விமர்சனம் எழுந்தது குறிப்பிடதக்கது.