திட்டம்போட்டு எங்களை ஏமாற்றி விட்டார்கள்… கண் கலங்கிய செந்தில் ராஜலக்ஷ்மி…

0
Follow on Google News

விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் பாட்டு போட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 6இல் கிராமிய பாடல்களை பாடி பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதி. இதில் செந்தில்கணேஷ், அந்த சீசனில் டைட்டல் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே இந்த தம்பதி ஏற்கனவே கோயில் கலை நிகழ்ச்சிகளில் கிராமிய பாடல்களை பாடி வந்தாலும் கூட, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு தான் இவர்கள் பிரபலமாக அறியப்பட்டனர்.

மேலும் கிராமிய பாடல்கள் அழிந்து கொண்டிருப்பது போன்றும் அதை காக்க வந்தவர்கள் தான் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதி என்கிற ஒரு மாயையை உருவாக்கிய விஜய் டிவி இவர்களை வைத்து தனது TRP ரேட்டிங்கை ஏற்றி கொண்டது, மேலும் கிராமிய பாடல்களுக்கு விஜய் டிவி தான் அங்கீகாரம் கொடுப்பது போன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தம்பட்டம் அடித்து கொண்டது விஜய் டிவி.

இருந்தாலும் செந்தில் – ராஜலக்ஷ்மி இருவருக்கும் திறமை இல்லை என்று மறுக்க முடியாது, இவர்களை வைத்து விஜய் டிவி TRP ரேட்டிங்கை ஏற்றி கொண்டது போன்று, விஜய் டிவியை வைத்து செந்தில் – ராஜலக்ஷ்மி தம்பதியினர் பிரபலம் அடைந்து கொண்டனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்பு பின்பு சினிமா திரைப்படங்களில் படுவதற்கு வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்ட ராஜலக்ஷ்மி – செந்தில் தம்பதியினர் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தில் பீலிங் பாடல் படி மிக பெரிய உச்சத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற செந்தில் கணேஷிற்கு 50 லட்சத்திற்கான வீடு பரிசாக கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு கிடைத்தது 50 லட்சம் மதிப்பிலான வீடு. ஆனால் அதை பெறுவதில் ஒரு சிக்கல் இருந்ததால் 35 லட்சம் வீடு தான் எங்கள் கைக்கு வந்தது என அவர்கள் இருவரும் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறி உள்ளனர் செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி.

இது குறித்து அவர்கள் பேசுகையில், சூப்பர் சிங்கர் 8ஆவது சீசனில் டைட்டில் வின்னராக வந்ததற்கு 50 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக கொடுக்கப்பட்டது. ஆனால் எங்களுக்கு கையில் கிடைத்தது 35 லட்சம் மதிப்பிலான வீடு. ஏனென்றால் 50 லட்சம் வீடு கிடைக்க 18 சதவிகிதம் வரி கட்ட வேண்டும் அப்படியென்றால் கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் கட்ட வேண்டும் என்கிற ஒரு நிலை இருந்தது , ஆனால் எங்களுக்கு 2 கண்டிஷன் போட்டதாக தெரிவித்த ராஜலக்ஷ்மி.

அதில், முதல் ஆப்சன் ரூ.15 லட்சம் கொடுத்தால் 50 லட்சம் வீடு எடுத்துக் கொள்ளலாம். 2ஆவது ஆப்ஷன் 15 லட்சம் கட்டவில்லை என்றால் 35 லட்சம் மதிப்பிலான வீட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்ததாகவும், அனல் ஏற்கனவே கிராமத்தில் எங்களுக்கு வீடு உள்ளதால், ஈரோடு மாவட்டம் உக்கரம் பகுதியில் வீடு தருகிறோம் என தெரிவிக்க, அந்த வீட்டை ராஜலக்ஷ்மி -செந்தில் தம்பதியினர் ஏற்று கொண்டுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து 15 லட்சம் குறைத்து 35 லட்சம் மதிப்பிலான வீட்டை பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இணைந்து ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்கள். இதே போன்று சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான அருணாவுக்கு 60 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக கொடுகப்பட்டது.

ஆனால், அதற்கு 15 லட்சம் வரி கட்ட வேண்டி இருந்ததால், தேவையான பணம் அவர்களிடம் இல்லாததால், ஒரு வருடம் கால அவகாசம் கேட்டு தற்பொழுது வரை வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம் என சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான அருணா குடும்பத்தினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here