மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற காதல் திரைப்படத்தில் சுருட்டை முடியுடன் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றவர்தான் மலையாள தேசத்து கன்னி, நடிகை அனுபமா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார் அனுபமா. தமிழில் கொடி, தள்ளிப்போகாதே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சில வாரங்கள் முன்பு இருந்தே இவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடன் ரகசியமாக திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது வந்தது. அனுபமா சமீபகாலமாகவே சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அப்போது இவருக்கு கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரீத் பும்ராவுடன் சமூக வலைத்தளங்களில் நட்புறவு ஏற்பட்டது.
சமூக வலைத்தளங்களில் இவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு விஷயங்களும் இருவரையும் இணைக்கும் விதமாக தொடர்ந்து இருந்து வருகிறது. சமீபத்தில் கிரிக்கெட் வீரருடன் ரகசியம் திருமணம் செய்து கொள்வதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. ஆனால் அனுபமா மற்றும் இவரது குடும்பத்தினரும் இதை மறுத்து வருகிறார். இவர்களுக்குள் நட்பு மட்டும் தானா? இல்லை காதல் மலர்கிறதா? என்று சிலர் கிசு கிசு வருகிறார்கள்…