படிப்பெல்லாம் முக்கியமே இல்லை… ஓவர் திமிராக பேசும் விஜய் சேதுபதி மகன்..

0
Follow on Google News

விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடித்த முதல் படம் இன்னும் திரைக்கு வரவில்லை, ஆனால், அவருடைய பேச்செல்லாம் பார்த்தா, 100 படம் நடித்து பல விருதுகள் வாங்கி குவித்து, ஆஸ்கர் விருது வாங்கி மேடையில் பேசுவது போன்று பேசி வருகிறார். என்னமோ இவர் உலகில் மிக பெரிய சாதனையை செய்துவிட்டு, அடுத்து சாதனை செய்யும் இளைஞர்களுக்கு இவர் பெரிய முன்னுதாரணம் போன்று வயத்துக்கு மீறி பேசி வருகிறார் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி.

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் விஜய் சேதுபதி மகன் நடிக்கும் பீனிக்ஸ் பறவை விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில், அடே இந்த படத்தோடு அந்த பையன முடுச்சு விட்டுட்டுக்கடா, இல்லை அடுத்தடுத்து படம் நடித்து நம்மளை பேசிய கடுப்பேத்தி விடுவார் என்று இவர் பேட்டியை பார்க்கும் மக்கள் மன குமுறலை கொட்டி வருவதை பார்க்க முடிகிறது. இன்னும் பலருக்கு விஜய் சேதுபதி மகனாக தான் இவருக்கு தெரியும், இவருக்கென தனி அடையாள எதும் இல்லை என்று யாராவது அந்த பொடி பையனிடம் சொல்லுங்கப்பா என்று பலரும் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி மகன் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, பப்ளிக் எக்ஸாம் எழுத என்னை பள்ளியில் ட்ராப் செய்ய என்னுடைய தந்தை பள்ளிக்கு வந்தார் என்றும், அப்போது தன்னிடம் என்னடா தேர்வு எழுத வேண்டுமா.? இல்ல வேற எங்கேயாவது போகலாமா.? கட் அடித்து விடுகிறாயா.? என்று தன்னுடைய தந்தை விஜய் சேதுபதி தன்னிடம் கேட்டதாக தெரிவித்த விஜய் சேதுபதி மகன்.

அதற்கு அப்பா, அம்மா செருப்பால அடிப்பாங்க வேண்டாம் பா, நான் பரிச்சை எழுதிட்டு வந்துருறேன் என்று சொன்னதாகவும், அதற்கு சரி எக்ஸாம் எழுதிட்டு வா என்று தன்னை விஜய் சேதுபதி அனுப்பி வைத்ததாக சிரித்துக்கொண்டு நக்கலாக பேசிய விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி அடுத்து தொடர்ந்து பேசியது தான் என்ன விஜய் சேதுபதி பிள்ளையை இப்படி வளர்த்து வைத்திருக்கிறீர்கள் என்று சொல்ல வைத்துள்ளது.

அதாவது தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி மகன், தன்னுடைய தந்தை இப்ப வரை ஒரு விஷயத்தை சொல்லுவார், அதாவது எஜுகேஷன் உன்னை வளர்க்காது, ஆனால் பள்ளிக்கு போவது மிகவும் அவசியம், ஏனென்றால் அங்கே இருக்கும் சக மனிதனைப் பார்த்து பழகுவதும் வளருவதும் தான் நாளைக்கு உன் வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கும். அதாவது வேலைக்கு நீ சென்ற பின்பு அங்கே அதே மாதிரியான மனிதனை தான் பார்க்கப் போகிறோம்.

வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மனிதர்களை பார்ப்போம். அதனால் பள்ளிக்கு சென்று சக மனிதர்களுடைய பழக ஆரம்பித்தால் இதெல்லாம் சரியாகிவிடும் அதுக்காக ஸ்கூலுக்கு போ, படிப்பதற்காக பள்ளிக்கு போக வேண்டாம் என்று தந்தை விஜய் சேதுபதி தனக்கு அறிவுரை வழங்கியதாகவும், மேலும் தான் படிப்பதிலும் மிகவும் கம்மியான மார்க் வாங்கியதாக சிரித்துக் கொண்டு பேசிய விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பேசியது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது விஜய் சேதுபதி இன்று பல கோடி சம்பாரித்து வைத்துள்ளதால், அவருடைய மகனுக்கு படிப்பின் அருமை தெரியவில்லை, மேலும் படிப்பின் அருமை தெரிந்து படிப்புக்கு மரியாதை கொடுத்து படித்து அறிவை வளர்த்து இருந்தால், சமீபத்தில் எங்க அப்பா வேற நான் வேற என்று பேசியது, எங்க அப்பா ஒரு நாளைக்கு வெறும் 500 ரூபாய் தான் பாக்கெட் மணி கொடுப்பார் என்றெல்லாம் அறிவு இல்லாமல் பேசி இருக்க மாட்டார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

அந்த வகையில் தப்பி நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்களிடம் சென்று பார், கல்வி வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்று, எந்த ஒரு திறமையையும் வெளிப்படுத்தாமல் அப்பா பெயரை சொல்லி சினிமாவுக்கு வந்த உன் முதல் படம் வெளியே வரட்டும் உண்ண வெச்சு செய்யுறோம் என பலரும் கமெண்ட் செய்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here