கடைசி நிமிடத்தில் மேஜர் முகுந்த்க்கு நடந்தது… அமரன் படத்தில் வெளிவராத உண்மை சம்பவம்…

0
Follow on Google News

ஆப்பிள் தோட்டத்தில் பதுங்கி இருந்த எதிரிகளில் முக்கிய கமேண்டர் அல்தா பாபாவை சுற்றி வளைக்கிறது மேஜர் முகுந்த் வரதராஜன் தலைமையிலான ராணுவ குழு. உடனே அல்தா பாபா தன் கைவசம் இருக்கின்ற ஏகே 47 துப்பாக்கியை ஆட்டோமேட்டிக் மோட்டில் போட்டு ராணுவம் தன்னை நெருங்க முடியாத அளவிற்கு ராணுவத்தை நோக்கி தெறிக்க விடுகிறார். அப்போது ராணுவ வீரர்களில் ஒவ்வொருவராக முன்னேறிச் சென்று எதிரியை அட்டாக் செய்யலாமா என்று மேஜர் முகுந்த் வரதராஜன் இடம் ராணுவ வீரர் ஒருவர் கேட்கிறார்கள்.

அதற்கு மேஜர் முகுந் வரராஜன் பொறுமையாக இருங்கள் என காத்திருக்க வைக்கிறார். இது மற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. அதாவது மேஜர் முகுந்தராஜன் தன்னுடைய எதிரி ஆட்டோமேட்டிக்கில் ஏகே 47 துப்பாக்கியை நீண்ட நேரம் ஆப்ரேட் பண்ண முடியாது. அந்த துப்பாக்கியை மேனுவலாக மாற்றுவார், அதுவரையும் காத்திருப்போம் என்று காத்திருக்கிறார் மேஜர் முகுந் வரதராஜன்.

ஒரு கட்டத்தில் சீறி பாய்ந்து வரும் புல்லட்டும் குறையுது. வெடிக்க கூடிய சத்தமும் குறைகிறது. இந்த நிலையில் எதிரி தன்னுடைய AK47ஐ மேனுவலாக மாற்றுவதை ஒழிந்து நின்று மேஜர் முகுந்த் வரதராஜன் கண்காணித்து விடுகிறார். மேனுவலில் ஏகே 47 னில் புல்லட்டை ஒரே நேரத்தில் 30 புல்லட் மட்டுமே செலுத்த முடியும் என்று கணக்கிடும் மேஜர் முகுந்த். எதிரி சுட ஆரம்பித்ததும் 30 குண்டுகளை ஒன்று ஒன்றாக கணக்கிடுகிறார் மேஜர் முகுந்த்.

மேஜர் முகுந்த் வரதராஜன் மேனுவல் மூடில் அல்தா பாபா தன்னுடைய ஏ கே 47 துப்பாக்கியை வைத்து சுட ஆரம்பித்ததும், அதிலிருந்து வெளியாகும் புல்லட்டை 20, 19, 18 என்று கணக்கிடுகிறார். அப்போது மேஜர் முகுந்த் நெருங்கிய நண்பரான விக்ரம் சிங் முகுந்த் வரதராஜனை உன்னிப்பாக கவனிக்கிறார். அப்போது இதில் 30 ஆவது குண்டு முடியும் பொழுது, நாம் எதிரியை அட்டாக் பண்ணலாம் என்று முகுந்த் வரதராஜன் அருகில் இருந்த நண்பர் விக்ரம் சிங்கிடம் தெரிவிக்கிறார்.

அதேபோன்று 30 குண்டுகள் தீர்ந்தவுடன் மேஜர் முகுந்த் தன்னுடைய டீம்முடன் உள்ளே சென்று அல்தா பாபாவை சுட்டு வீழ்த்துகிறார். அப்போது அங்கு இருந்த வீரர்கள் அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கும் பொழுது அந்த இடத்தில் ஒரு மோட்டரோலா போன் இருப்பதை மேஜர் முகுந்த் கண்டுபிடிக்கிறார். இதனை தொடர்ந்து இந்த தொலைபேசியை பயன்படுத்தி எதிரிகளுக்குள் உரையாடி இருப்பார்கள்.

இதில் உள்ள கோட் வைத்து மற்ற எதிரிகளும் எங்கே இருப்பார்கள் என்று கண்டுபிடித்து விடலாம் என்று அந்த மோட்டோரோலா போனை இண்டெலிஜென்ட் அணியிடம் கொடுக்கிறார் முகுந்த் வரதராஜன். இதனைத் தொடர்ந்து அல்தா பாபா இறந்தவுடன் ஆசிப் வாணி என்கின்றவன் கமாண்டர் பொறுப்பு ஏற்கிறான். இந்த நிலையில் ஏற்கனவே அல்தா பாபா சுட்டு வீழ்த்தப்பட்ட போது எடுக்கப்பட்ட மோட்டோரோலா போனில் உள்ள சில கோடுகளை கண்டுபிடித்து.

ஆசிப் வாணி ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் இருக்கிறார், 23 ஏப்ரல் 2014 அன்று அந்த கிராமத்திற்கு சென்றால் பிடித்து விடலாம் என்கின்ற தகவலை ,முகுந்த் வரதராஜன் உறுதி செய்துவிட்டு, தன்னுடைய மேல் அதிகாரிகளுக்கு இந்த தகவலை தெரிவித்து அங்கே தன்னுடைய குழுவுடன் செல்கிறார் முகத் வரதராஜன். அந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு ஆசிப் வாணி தங்கி இருக்கும் அந்த குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைக்கிறது முகுந்த் வரதராஜனின் குழு.

இந்த நிலையில் முகுந்த் வரதராஜன் ராணுவக் குழுவிற்கும் ஆசிப் வாணி குழுவினருக்கும் இடையில் நடந்த தாக்குதலில், ஆசிப் வாணி குழுவில் ஒருவர் இறந்து விடுகிறார், ஆசிப் வாணி இருக்கும் இடத்தை முன்னேறி விக்ரம் சிங் தாக்க முயற்சிக்கிறார். அப்போது ஆசிப் வாணி எதிர் தாக்குதலில் விக்ரம் சிங் உயிரிழந்து விடுகிறார். உடனே தன்னுடைய நண்பனை கொன்ற ஆசிப் வாணியை சுட்டு வீழ்த்தாமல் விடமாட்டேன் என்று முன்னேறிச் சென்று ஆசிப் வாணியை சுட்டு வீழ்த்துகிறார் மேஜர் முகுந்த்.

அப்படி சுட்டு வீழ்த்திவிட்டு திரும்பி வரும்போது வெளியே காத்திருந்த முகுந்த் வரதராஜன் குழுவினர்கள் ஓடி வந்து அவரை கட்டிப்பிடிக்க வரும் பொழுது மயங்கி விழுந்து விடுகிறார். அப்போது அவர் ஜாக்கெட்டை திறந்து பார்த்தபோது மூன்று புல்லட் அவர் மார்பில் பாய்ந்திருக்கிறது இந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது வீர மரணம் அடைகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here