சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி எப்ப மாட்டுவார் எப்ப மாட்டுவார் என்ற ரசிகர்கள் எதிர்பார்க்க அந்த சீன் வந்துவிட்டது, கனடாவில் இருந்து வந்த ஜீவா மனோஜிடமிருந்து எடுத்துட்டு போன 27 லட்ச ரூபாயை மனோஜிடமே வட்டியுடன் 30 லட்சம் ஆக திருப்பி கொடுத்து விட்டேன் என்று முத்துவிடம் தெரிவிக்க, முத்து ஜீவாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்று தன்னுடைய குடும்பத்தின் மத்தியில் அனைத்து உண்மையையும் போட்டு உடைத்து விடுகிறார்.
இதனால் மனோஜும் ரோகிணியும் வசமாக சிக்கி கொள்கிறார்கள். திரும்பி ஜீவாவிடம் பணம் வாங்கியது ஏன் சொல்லவில்லை என்று மனோஜை குடும்பத்தினர் கேட்க, ரோகிணி தான் இந்த ஐடியாவை கொடுத்து என்னை ஷோரூம் திறக்க வைத்தார் என்று ஒரே போடாக போட்டு ரோகிணியை மாட்டி விடுகிறார் மனோஜ். அந்த விதத்தில் ரோகினி தான் இந்த அளவுக்கு கிரிமினலாக யோசித்துள்ளார் என்பது அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து ரோகினியை பளார் என்று அறைகிறார் விஜயா, இப்படி ரோகிணிக்கு எதிராக ஒட்டு மொத்த குடும்பமும் திரும்புகிறது, இதனை தொடர்ந்து ரோகிணி மீது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மிகப்பெரிய சந்தேகம் வருகிறது. தன்னுடைய அப்பா மலேசியாவில் இருக்கிறார் என்று ஒரு பக்கம் கதை விட்டு அப்பா சிறையிலிருந்து பணம் அனுப்பியதாக பொய் சொன்ன ரோகினி குறித்து தீர விசாரிக்கணும் என்று முத்து முடிவு செய்கிறார்.
இந்த நிலையில் அண்ணாமலை வேலை பார்க்கும் அதே பள்ளியில் ரோகினியின் ஏழு வயது மகனும் படித்துக் கொண்டிருக்கிறார், இப்படி ஒரு நாள் அண்ணாமலையை பார்க்க அவர் வேலை செய்யும் பள்ளிக்கு முத்து வரும்பொழுது அவர் கண்ணில் பட்டுவிடுகிறார்கள் க்ரிஷ். உடனே தன்னுடைய தந்தை அண்ணாமலையிடம் அப்பா இந்த ஸ்கூல்ல தான் கிரிஷ் படிக்கிறான்.
நான் இத்தனை நாளா தேடிட்டே இருக்கேன், எங்க இருக்கான்னு தெரியல.? இப்ப இங்க படிக்கிறான். இவன் வீட்டு அட்ரஸ் எல்லாம் எனக்கு தேடி குடுங்கப்பா, அவன் இருக்கிற இடத்தில போய் நான் அவங்க பாட்டி கிட்ட பேசுகிறேன் என்று சொல்லுகிறார் முத்து. கண்டிப்பாக உனக்கு நான் செஞ்சு தருகிறேன் என்று, அண்ணாமலை அந்த பள்ளி அலுவலகத்தில் இருப்பவர்களிடம் விசாரிக்கிறார்.
கிரிஷ் அவருடைய அம்மா பெயர் கல்யாணி என்றும் அவருடைய தந்தை இறந்து விட்டார், மேலும் அவருடைய அம்மா தொலைபேசி எண்ணையும் அண்ணாமலை சேகரித்து முத்துவுக்கு கொடுக்கிறார், முத்து அந்த நம்பரை பார்த்துவிட்டு இது பார்லர் அம்மாவோட நம்பர் ஆச்சு, என்று முத்துவுக்கு ஒரே குழப்பம், இதனை தொடர்ந்து இந்த விஷயத்தை மீனா சுருதி ரவியிடம் தெரிவிக்கிறார் முத்து.
உடனே சுருதி குரலை மாற்றி வேறு ஒரு புதிய எண்ணில் இருந்து ரோகிணிக்கு பேசி, நாங்கள் கிரிஷ் படிக்கும் பள்ளியில் இருந்து பேசுகிறோம், நீங்க இந்த ஸ்கூல்ல உங்க பையன சேர்த்ததுக்கு அப்புறம் உங்க பையனோட பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கு என்று கருத்து கேட்க தான் நாங்க போன் செய்கிறோம் என்று சொல்ல, அதற்கு ரோகிணி நல்லா இருக்கு என் பையனோட பெர்ஃபார்மன்ஸ் அப்படின்னு சொன்னதும்,
இதைக் ஸ்பீக்கரில் ரோகிணி பேசுவதை கேட்க எல்லோரும் சாக் ஆகிறார்கள். உடனே கிரிஷ் குறித்த பின்னணியை சேகரித்தால் ரோகினி ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கு குழந்தை இருப்பது தெரியவருகிறது. அந்த குழந்தை தான் கிரிஷ் என்பது தெரிய வருகிறது, இந்த தகவல் விஜயாவுக்கும் தெரிய, உடனே விஜயா போலீசில் புகார் செய்து, ஏற்கனவே திருமணம் ஆன இவள் என்னுடைய குடும்பத்தையே ஏமாற்றி என் மகனை திருமணம் செய்து கொண்டார் என்று புகார் கொடுத்து ரோகிணியை விஜயா சிறைக்கு அனுப்பும் காட்சி எல்லாம் இனி சிறையடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்து வர இருக்கிறது என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது