ரோஹிணியை அடித்து துரத்திய விஜயா… சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது.

0
Follow on Google News

சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த சீன் தற்பொழுது அரங்கேறி வருகிறது. கனடாவில் இருந்து வந்த ஜீவா தான் தன்னுடைய அண்ணன் மனோஜிடமிருந்து 27 லட்ச ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடியது என்று முத்துவுக்கு தெரிய வருகிறது. உடனே ஜீவாவிடம் சென்று என்னுடைய அண்ணன் மனோஜிடமிருந்து பணத்தை சுருட்டி கொண்டு போனது நீதான், ஒழுங்கா பணத்தை திருப்பி கொடு என்று கேட்கிறார் முத்து.

அதற்கு ஜீவா உன் அண்ணனிடம் 27 லட்ச ரூபாய் உடன் சேர்த்து வட்டியுடன் 30 லட்சம் ரூபாய் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து விட்டேன், கடந்த முறை நான் இந்தியா வந்த போது, போலீஸ் ஸ்டேஷனில் நீ எனக்கு கையெழுத்து போட்ட, அது அதற்காகத்தான் என்று தெரிவிக்கிறார் ஜீவா. உடனே முத்து இவ்வளவு வேலை நடந்து இருக்கிறதா.? அந்த ஓடுகாலி இப்படி எங்கள் குடும்பத்தையே ஏமாற்றி விட்டானே என்று முத்து தெரிவிக்க.

அதற்கு ஜீவா மனோஜும் அவருடைய மனைவி ரோகினியும் என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அவமானப்படுத்தி விட்டார்கள் என்றெல்லாம் முத்துவிடம் குமுறுகிறார். உடனே முத்து, சரி நீ என் வீட்டுக்கு வா வந்து இது எல்லாம் என்னுடைய குடும்பத்தினரிடம் சொல்லு என்று சொல்ல, அதற்கு ஜீவா அதான் நான் பணத்தை கொடுத்துட்டேன்ல, எதுக்கு நான் வரணும், நீயே போய் சொல் என்று சொல்கிறார் ஜீவா.

அதற்கு நான் சொன்னால் அந்த ஓடு காலியும் பார்லர் அம்மாவும் நான் பொய் சொல்கிறேன் என்று சொல்வார்கள் என்று முத்து சொல்ல. அதற்கு அவர்களுக்கும் எனக்கும் பழைய கணக்கு இருக்கிறது, அதனால் அதை தீர்த்துக் கொள்ள நானே வீட்டிற்கு வருகிறேன் என்று ஜீவா முத்துவுடன் வீட்டுக்கு வருகிறார். வீட்டில் இருக்கும் அனைவரையும் முத்து அழைக்கிறார், என்ன விஷயம் என்று எல்லாரும் கேட்க வீட்டுக்கு வெளியே இருந்த ஜீவாஉள்ளே என்ட்ரி கொடுக்கிறார்.

ஜீவாவை பார்த்த மனோஜுக்கு ரோகிணிக்கும் பெரிய ஷாக், உடனே முத்து தன்னுடைய குடும்பத்தாரிடம் அப்பா 27 லட்சத்தை மனோஜ் இடம் இருந்து தூக்கிக் கொண்டு ஓடிய பெண் இதுதான், அந்த பணத்தை மனோஜ் இடமே திருப்பி கொடுத்துவிட்டார் என்றதும், குடும்பத்தில் இருக்கிற அனைவருக்கும் ஷாக், உடனே ஜீவாவும் நடந்து அனைத்து விஷயத்தையும் போட்டு உடைக்கிறார்.

இதில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டு திரு திரு என்று முழிக்கிறார்கள் ரோகினியும் மனோஜ், மேலும் ஜீவா நான் 27 லட்சம் திருப்பி கொடுத்ததற்கு மனோஜ் மனைவி ரோகினி வட்டியுடன் வேண்டும் என்று 30 லட்சமாக வாங்கினார் என்று சொன்னதும் ஒட்டுமொத்த குடும்பமும் ஷாக் ஆகுது. உடனே எங்கடா அந்த பணம் என்று குடும்பத்தினர் கேட்க. மனோஜம் ரோகிணியும் பதில் சொல்லாமல் திணறுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த பணத்தில் தான் நான் ஷோரூம் திறந்தேன் என்று உண்மையை சொல்லுகிறார் மனோஜ். முத்து இடையில் நுழைந்து, இந்த மொத்த பிரச்சனைக்கு காரணம் இந்த பார்லர் அம்மா தான், மனோஜ்க்கு இந்த மாதிரி கிரிமினலா மனோஜ்க்கு யோசிக்க தெரியாது, எல்லாம் பார்லர் அம்மா கொடுத்த ஐடியா தான் என்றதும், விஜயா ரோகிணியை பார்த்து ஏன் பொய் சொன்ன. அதுவும் உங்க அப்பா மலேசியாவில் இருந்து பணம் அனுப்புனதா ஏன் பொய் சொன்ன.? என்று சரமாரியா கேள்வி கேட்க.

இல்ல ஆன்ட்டி என்று ரோகினி சமாளிக்க முயன்றும், ஏன்டி பிராடு நாயே, யாரடி ஏமாத்துற என்று பளார், பளார் என்று ரோகிணி கன்னத்தில் விஜயா அறைகிறார். மேலும் உனக்கு இனி இந்த வீட்டில் இடமில்லை, மலேசியாவில் இருக்கும் உன் அப்பா வந்தால் மட்டும் தான் உனக்கு இந்த வீட்டில் இடம் என விஜயா ரோகிணியை வீட்டை விட்டு வெளியே ஏற்றும் காட்சிகள் இனி வரும் நாட்களில் அரங்கேற இருக்கிறது.