ரோகினி தான் என்கிட்ட வீடியோவை கொடுத்தது…முத்துவிடம் உண்மையை போட்டுடைத்த சிட்டி…

0
Follow on Google News

ஒரு வழியாக போலீஸ் பிரச்சனை எல்லாம் முடிந்து விஜயா நகையை பறித்த சம்பவத்திலிருந்து சத்யா தப்பித்து விட்டார். இந்த நிலையில் தன்னுடைய போனை யார் எடுத்தது.? அதிலிருந்து வீடியோவை யார் வெளியிட்டது.? என குழப்பத்தில் இருக்கிறார் முத்து. அப்போது சத்யா மாமா இதை சிட்டி தான் செஞ்சிருப்பான் எனக்கு நல்லா தெரியும், நம்ம பழி வாங்குவதற்காக இவன் கண்டிப்பா செஞ்சிருப்பான் என்று சத்யா சொல்கிறார்.

அதற்கு முத்து என் போன் எப்படி அவன் கைக்கு எப்படி போய் இருக்கும். அதனால வாய்ப்பு இல்ல என முத்து சொல்கிறார். அதற்கு சத்யா இல்ல மாமா கண்டிப்பா அவதான் செய்திருப்பான் என்றதும், முத்துவும் சத்யாவும் சிட்டி ஆபீஸ் சென்று சிட்டியை மிரட்டுகிறார்கள் நீ தான் இந்த வீடியோவை வெளியிட்ட என்று தெரிந்திருதால் உனக்கு அவ்வளவு தான் என மிரட்டுகிறார்கள்.

இதனை தொடர்ந்து தன்னை வந்து முத்துவும் சாத்யாவும் மிரட்டி விட்டு செல்வதை ரோகினிடம் தெரிவிக்கும் சிட்டி, நான் மாட்டிக் கொண்டால் உன்ன மாட்டி விட்டு விடுவேன். அதனால் முத்து இதை கண்டுபிடிக்க முடியாத படி நீ தான் பார்த்துக் கொள்ளணும் என்று சிட்டி ரோகினியை எச்சரிக்கிறார். இந்த நிலையில் சிட்டி அலுவலகத்தில் வேலை பார்த்த ஒருவர் சிட்டி இடம் இருந்து பிரிந்து வெளியேறினார்.

அவர் வெளியேறி சத்யாவிடம் உன் வீடியோவை வெளியிட்டது சிட்டி தான் என்று மொத்தமாக போட்டு உடைத்து விடுகிறார். அது மட்டும் இல்லாமல் சிட்டியிடம் அந்த வீடியோவை கொடுத்தது ரோகிணி தான் என்றும், முத்து போனை சிட்டி தான் ரோகினியை எடுத்து அந்த வீடியோவை தனக்கு அனுப்ப சொன்னதாகவும் சத்யாவிடம் தெரிவித்தவர். மேலும் இதற்கு கைமாறாக ரோகினியை தினேஷ் என்ற ஒருத்தன் தொடர்ந்து பிளாக்மெயில் செய்து கொண்டே இருந்தான்.

அவனை அடித்து விரட்ட சிட்டி உதவி செய்ததாகவும். நாங்கள் தான் அந்த தினேஷை அடித்து விரட்டினோம் என்று சிட்டி உடன் இருந்தவன் சத்யாவிடம் போட்டு விடுகிறார். உடனே சத்தியா, முத்துவிற்கு தெரிவிக்க முத்துவும் சத்யாவும் பறந்து சென்று சிட்டியை வெளுவெளு என்று வெறுக்கிறார்கள். இதன் பின்பு சிட்டியை அல்லக்காக தூக்கி வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.அப்படி சிட்டியை முத்தும் சத்யாவை அழைத்து சென்ற போது, அங்கே வீட்டில் ரோகிணி உட்பட எல்லாரும் இருக்க.

ரோகிணிக்கு திடீரென்று சாக். சிட்டி எதுக்கு வர்றான், இவன் எல்லாத்தையும் போட்டு விட்டானோ என்கின்ற பயம். சொல்எரா ல்லாத்தையும் என்று முத்து பளார் என்று ஒரு அறை சிட்டியை விட. அவர் மொத்தமும் சொல்லிவிடுகிறார் ரோகிணி தான் முத்து போனை எடுத்துட்டு வந்து என்னிடம் கொடுத்தது. வீடியோவை நான் வெளியிட்டேன். இதற்கு பதிலாக தினேஷ் என்பவர் ரோகினி 30 லட்சம் கேட்டு ப்ளாக் மெயில் செய்து மிரட்டிகிட்டே இருந்தார்.

அவரை அடித்து ஊரை விட்டு விரட்ட சொன்னார். நாங்கள் அதை செய்து விட்டோம் என்றதும. யார் அந்த தினேஷ் போட்டோ காமி என்று சிட்டி இடம் கேட்க சிட்டி அந்த போட்டோவை காட்டுகிறார். இவன் சாமியார் வேஷம் போட்டு வந்தவன்ல என்று மனோஜுக்கு தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த பார்லர்மா பலே கேடி என்பது இப்பயாவது உங்க எல்லாத்துக்கும் தெரியுதா என்று முத்து தெரிவித்து.

சிட்டியிடம் இனிமேல் என் வழியில குறுக்கிட்ட உனக்கு அவ்வளவுதான் என்று மிரட்டி விரட்டி விடுகிறார். இதன் பின்பு ஒட்டுமொத்த குடும்பத்தினர் முன்பும் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட ரோஹினியை, விஜயா மனோஜ் எல்லாரும் துருவி துருவி கேட்கிறார்கள், யார் அந்த தினேஷ்.? எதற்காக உன்னிடம் பிளாக் மெயில் செய்து 30 லட்சம் பணம் கேட்கிறான்.? உண்மையிலேயே உன்னுடைய பின்னணி என்ன.? என்று கேட்க, சமாளிக்க முடியாமல் திணறி நிற்கிறார் ரோகினி. இந்த முறையாவது ரோகிணி நிச்சயம் மாட்டுவாரா.? அல்லது ஏதாவது சொல்லி தப்பித்துக் கொள்வாரா என்பதை உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here