ஏழ்மையான குடும்பம்… தையல் வேலை… சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவின் சோகமான நிஜ வாழ்க்கை…

0
Follow on Google News

சிறகடிக்க ஆசையில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோமதி பிரியா மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்தவர். அவருடைய தந்தை மதுரையில் உள்ள நகை கடைகளில் கணக்கு பார்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கோமதி பிரியா சிறுவயதில் இருக்கும்போது அவர் தந்தைக்கு நல்ல வருமானம் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவருடைய தந்தைக்கு நீண்ட நாள் ஆசையாக சொந்த வீடு கட்ட வேண்டும் என்கின்ற ஆசையை கோமதி பிரியா நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது சொந்த வீடு கட்டி முடித்துள்ளார்.

மேலும் தொழில் தொடங்க ஆசைப்பட்ட கோமதி பிரியாவின் தந்தை ஹோட்டல் தொழிலை தொடங்கி ஒரு வருடத்தில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து, ஆசை ஆசையாய் கட்டிய சொந்த வீடு மற்றும் கோமதி பிரியாவின் அம்மாவின் நகை என அனைத்துமே விற்று விட்டார். இந்த நிலையில் குடும்பம் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் வறுமையில் வாடியதால் அரசு பள்ளியிலேயே தொடர்ந்து படித்து வந்த கோமதி பிரியா.

படிக்கும் காலகட்டத்தில் அவருடைய அம்மாவிற்கு உதவியாக தையல் தொழில் செய்வது மற்றும் பாசி கோர்ப்பது என சிறு சிறு தொழில்களை செய்து கொண்டே அரசு பள்ளியில் படித்து வந்துள்ள கோமதி பிரியா பத்தாம் வகுப்பில் 474 மதிப்பெண், பனிரெண்டாம் வகுப்பில் 1094 மதிப்பெண்களை பெற்றார். அந்த அளவுக்கு குடும்பம் வறுமையில் இருந்தாலும் நம்மளுக்கு மிகப்பெரிய எதிர்காலம் நம்முடைய படிப்பு தான் என்பதை தீர்மானித்து தன்னுடைய அம்மாவுடன் சிறு சிறு வேலைகள் செய்து அரசு பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்றார் கோமதி பிரியா.

இதன் பின்பு கல்லூரி செல்வதற்கு கோமதி பிரியா வீட்டில் கட்டணம் செலுத்த வசதி இல்லை. ஆனால் கோமதி பிரியா தொடர்ந்து தினசரி நாளிதழ்களை படிக்கும் வழக்கம் கொண்டவர். அப்படி தினசரி நாளிதழை படித்து வரும்பொழுது ஏழ்மையான மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் மூலம் இலவசமாக படிக்கலாம் என்கின்ற வாய்ப்பை அறிந்து சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இலவசமாக ஸ்காலர்ஷிப் மூலம் சேர்கிறார்.

அதில் தேர்வு கட்டணம் மட்டும் தான் கோமதி பிரியா கட்ட வேண்டி இருக்கும், மற்றபடி ஹாஸ்டல் சாப்பாடு என அனைத்துமே இலவசம். இருந்தாலும் சென்னையில் கோமதி பிரியா படித்துக் கொண்டிருக்கும் பொழுதே தன்னுடைய கை செலவுக்கு பணம் வேண்டும் என்பதற்காக சனி ஞாயிறு தேதிகளில் ஏதாவது சென்னையில் பார்ட் டைம் ஜாப்பாக வேலை பார்த்து வந்துள்ளார் கோமதி பிரியா.

இதனைத் தொடர்ந்து கேம்பஸ் இன்டர்வியூவில் திருவான்மியூர் பகுதியில் ஒரு ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார் கோமதி பிரியா. ஐ டி கம்பெனியில் வேலை செய்தாலும் கூட லீவ் நாட்களில் விடுமுறை நாட்களில் விஜய் டிவியில் நடக்கும் நிகழ்ச்சியில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக கலந்துகொண்டு வந்துள்ள கோமதி பிரியாவிற்கு ஆயிரம் ரூபாய் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆன சம்பளம் கிடைத்து வந்துள்ளது.

இப்படி ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக கலந்து கொண்ட கோமதி பிரியாவிற்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வேலையை விடாமல் விடுமுறை நாட்கள் மற்றும் வேலை பார்த்து கொண்டிருந்த திருவான்மியூரில் ஐடி கம்பெனியில் விடுமுறை எடுத்துக்கொண்டு நாம் இருவர் நமக்கு இருவர் என்கின்ற சீரியலில் நடித்து வந்தார், ஆனால் சரியாக நடிக்கவில்லை என பலமுறை இயக்குனர்களிடம் திட்டு வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் சின்னத்திரையில் நல்ல வருமானம் வருவதை உணர்ந்த கோமதி பிரியா திருவான்மியூரில் வேலை தான் நல்ல பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு முழுவதும் சீரியலில் நடிகையாக முயற்சி செய்யலாம் என்கின்ற முடிவெடுத்தார். கூத்து பட்டறையில் பயிற்சியும் பெற்ற கோமதி பிரியா இயக்குனர் பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் ஒரு நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து ஓவியா என்கின்ற சீரியலிலும் வேலைக்காரன் சீரியலிலும் கோமதி பிரியா நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருடைய தந்தை பாண்டிச்சேரியில் ஒரு விபத்தில் பலியாகிறார். இதன் பின்பு தன்னுடைய மொத்த குடும்பத்தின் பொறுப்பும் கோமதி பிரியா தலையில் விழுகிறது. அவருடைய தங்கை தம்பியை படிக்க வைக்க வேண்டும்,

இதனை தொடர்ந்து தெலுங்கு சீரியலிலும் வாய்ப்பை பெற்று நடித்து வந்த கோமதி பிரியாவிற்கு தமிழில் சிறகடிக்க ஆசை சீரியல் மிகப்பெரிய வரவேற்பு பெற்று உலக ஃபேமஸான கோமதி பிரியா தற்பொழுது சீரடிக்க ஆசை மலையாளத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கோமதி பிரியா பலருக்கு இன்று ரோல் மாடல் என்றும் சொல்லும் அளவிற்கு அவருடைய கடந்த கால வாழ்க்கை கடுமையான போராட்டங்களும் சோகங்களும் நிறைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.