மீனாவிடம் உண்மையை கக்கிய மலேசியா மாமா…. ரோகிணி போட்ட நாடகம் அம்பலம்…

0
Follow on Google News

சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த காட்சிகள் தற்பொழுது ஒளிபரப்பாக இருக்கிறது, ரோகினி ஒரு டுபாக்கூர் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்த முத்துவும் மீனாவும் அவர் தொடர்பான விஷயங்களை விசாரிக்க தொடங்குகிறார்கள், இதனை தொடர்ந்து ரோகிணி தோழி வித்யா, பார்வதி ஆண்டி ஆகியோரிடம் சென்று விசாரிக்கிறார்கள் முத்து – மீனா.

விசாரித்ததில் ரோகிணி குறித்து பல திடுக்கிடும் தகவல் வெளி வருகிறது. இதனால் முத்து – மீனா இருவருக்கும் சந்தேகம் வலுக்கிறது, அந்த வகையில் இவர் அப்பா மலேசியா கிடையாது, ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வருகிறார் என்று மீனா – முத்து உறுதி செய்த நிலையில், ஆனால் இதை எப்படி ஆதாரத்துடன் கண்டுபிடிக்கிறது என்கின்ற முயற்சியில் இறங்கிய உள்ளனர்.

இந்த நிலையில் மலேசியாவில் இருக்கும் ரோகினி தந்தை இறந்துவிட்டார் என்கின்ற ஒரு பொய்யை மலேசியா மாமா மூலம் வீட்டில் சொல்லி ஏமாற்றுகிறார் ரோகிணி. இதையும் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் நம்புகிறார்கள், அப்பாடா ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது என்கிற பெரு மூச்சு விடுகிறார் ரோகிணி. இதனை தொடர்ந்து வித்யா வீட்டில் ரோகிணி , மலேசியா மாமா அகியோரு உள்ளனர்.

இதன் பின்பு ரோகினி அவருடைய தந்தை இறந்த துக்கத்தில் இருப்பார், அவருக்கு ஆறுதல் சொல்லலாம் என்று ரோகினி இருக்கும் அவருடைய தோழி வித்யா வீட்டிற்கு செல்கிறார் மீனா, அங்கே வித்யா, ரோகினி, மலேசியா மாமா மூவரும் பேசிக்கொண்டிருப்பதை கேட்ட மீனா, உள்ளே வந்து நீங்கள் எல்லாரும் பித்தலாட்டக்காரர்கள் என்பதை அவர்கள் முன்னிலையில் தெரிவிக்கிறார்.

மலேசியா மாமா எனக்கு எதுவும் தெரியாது நான் கறிக்கடை வைத்திருக்கிறேன் என்று ஓட்டம் எடுக்கிறார். இதன் பின்பு ரோகினியிடம், உன்னை பற்றி எங்களுக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது, அனாலும் உன் அப்பா இருந்து விட்டார் என்று உனக்கு ஆறுதல் சொல்ல தான் இங்கே வந்தேன், எவ்வளவு பெரிய பொய் சொல்லிருக்க, வீட்டில் உன்னை பற்றி சொல்கிறேன் என்று கிளம்புகிறார் மீனா.

உடனே மீனா கையைப் பிடித்து உள்ளே தள்ளி கதவை அடைத்து கத்தியை காட்டி மிரட்டுகிறார் ரோகிணி, ஆனால் அதே கத்தியை புடுங்கி ரோகினி கையை முறுக்கி இதெல்லாம் என்கிட்ட வச்சுக்காத என எச்சரிக்கும் மீனா, நீ இப்பயும் திருந்தல என்று அங்கிருந்து வெளியேறுகிறார் மீனா, இதன் பின்பு ரோகினியை ஒட்டுமொத்த குடும்பத்தினர் மத்தியிலும் அம்பலப்படுத்துவாரா மீனா.?

அல்லது ரோகினி மீனா கையில் காலில் விழுந்து என்னை மன்னிச்சிடு மீனா, நீ தான் என்னை காப்பாற்றனும் என்று சென்டிமென்ட் ஆக மீனா மனதை கரைத்து விடுவாரா.? ரோகிணி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும. ஆனால் ரோகினி என்ன பொய்யை இனிமேல் சொன்னாலும் மீனா நம்ப மாட்டார் என்பதால் நிச்சயம் ரோகினியின் வண்டவாளம் குடும்பத்தினர் மத்தியில் தண்டவாளம் ஏறப்போகிறது.

அதே நேரத்தில் ரோகினி பற்றிய உண்மை தெரிய வந்ததும், சரி நடந்தது நடந்து போச்சு வேலையை பாருங்க என அண்ணாமலை பேச போகிறாரா.? என்கிற கேள்வி எழுந்துள்ளது, எப்படியோ ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சிகள் எல்லாம் இனி சிறையடிக்க ஆசையில் அரங்கேற இருக்கிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here