ரோகினியை பற்றி முத்துவிடம் புட்டு புட்டு வைத்த தினேஷ்… வசமாக சிக்கிய சிறகடிக்க ஆசை ரோகினி…

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் பேராதரவை சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியலில் கடந்த வாரம் ரோகினியின் மகன் கிரஷுக்கு கண்ணில் ஆபரேஷன் செய்து ஹாஸ்பிடலில் இருந்தார். முத்து- மீனா அவர்களை தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.

வழக்கம்போல் தங்களுடைய வீட்டிற்கு இருக்கக் கூடாது என்று விஜயா திட்டினார். மீனா, கிருஷுக்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்தார். இதை பார்த்து ரோகினிக்கு கோபம் வந்தது. ஒரு வழியாக கிருஷுக்கு தன் தாய் ரோகினி தான் என்பது தன் விட்டது. ரோஹினியும் தன் மகனுடன் விளையாடி சந்தோசமாக இருந்தார். அதன் பின் வீட்டில் முத்துவின் நண்பர், தன்னுடைய அண்ணன் கல்யாணம் என்று பத்திரிக்கை வைத்தான். அப்போது முத்து கிண்டலாக தன் கல்யாணத்தை பற்றி பேசி இருந்தார். இதைக் கேட்டு மீனா மனம் உடைந்து விடுகிறார்.

இதுதான் சந்தர்ப்பம் என்று விஜயா, மீனாவை கிண்டல் செய்தார். பின் மீனாவை காணவில்லை என்று முத்து- அண்ணாமலை பதறிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் முத்து வீட்டிற்கு வந்தார். அங்கு மீனாவை பார்த்து சந்தோசப்பட்டு பயங்கரமாக திட்டுகிறார். மீனா, நான் பூ கட்டுவதற்கு போனேன். சுருதி இடம் சொல்லிவிட்டு தான் சென்றேன் என்றார்.

இன்னொரு பக்கம் சத்யா, சிட்டி இடம் இனிமேல் முத்து, என்னுடைய அக்கா விஷயத்தில் தலையிட வேண்டாம். நமக்கு எதற்கு அந்த வேலை என்று சொல்லிவிட்டு செல்கிறார். இந்த நிலையில் ரோகினி கடைக்கு அவருக்கு தொல்லை கொடுக்கும் தினேஷ் வந்து பணம் கேட்கிறார். பணம் கொடுக்க முடியவில்லை என்று ரோகினி சொன்னவுடன், கடையில் இருக்கும் விலை மதிப்புள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு செல்கிறார் தினேஷ்.

பின் மனோஜிடம் EMIல் பொருள் விற்றுவிட்டேன் என்று ரோகினி சொல்லி சமாளிக்கிறார். இந்நிலையில் இனி வரும் நாட்களில் தினேஷ்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், இவன் தொல்லை தங்க முடியவில்லை என் ரோகினி, அவருடைய தோழியிடம் இவனை என்ன செய்யலாம் என ஐடியா கேட்கிறார், அதற்க்கு தினேஷுக்கு ஒவ்வொரு முறை பணம் தருவதற்கு, ஒரு ரவுடியை பார்த்து ஒரே தடவை பணம் கொடுத்து தினேஷை மிரட்டி அடக்கி வைக்கலாம் என ஐடியா கொடுக்கிறார் அவரது தோழி வித்யா.

இதனை தொடர்ந்து, சிட்டியை சந்தித்து தினேஷ் தொல்லை கொடுக்கிறான் அவனை மிரட்டி வைக்க வேண்டும் என சிட்டி சொல்ல, ஏற்கனவே முத்து, மீனா மீது உள்ள பகையை தீர்க்க ரோகினி நமக்கு உதவியாக இருப்பபார் என, ரோஹிணிக்கு உதவி செய்யும் வகையில் தினேஷை ஆட்களுடன் சென்று மிரட்டி பார்க்கிறார் சிட்டி, ஆனால் தினேஷ் கேட்பதாக இல்லை, இதனை தொடர்ந்து தினேஷ் மீது கை வைக்கிறான் சிட்டி.

ஒரு வழியாக சிட்டியிடம் தப்பித்து ஓடும் தினேஷை சிட்டி விடாமல் துரத்துகிறார். அப்போது முத்து, சிட்டியிடம் இருந்து தினேஷை காப்பாற்றுகிறார். என்னையே ஆட்கள் வைத்து காலி செய்ய பார்க்கிறாயா.? உன்னை என்ன செய்கிறேன் பார் என தன்னை காப்பாற்றிய முத்துவிடம் ரோகினி பற்றி அணைத்து விஷயத்தையும் போட்டு உடைக்கிறார் . இதன் மூலம் ரோகினி முகத்திரை கிழிந்து கூடிய விரைவில் முத்துவிற்கு தெரிய வரப்போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here