கடனில் தத்தளிக்கும் செந்தில் – ராஜலக்ஷ்மி… கடவுளாக காட்சி அளிக்கும் பாலா..

0
Follow on Google News

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிக பிரபலமாக அறியப்பட்டவர்கள் செந்தில் – ராஜலக்ஷ்மி தம்பதியினர். இந்நிலையில் சமீபத்தில் ராஜலக்ஷ்மி பேட்டி ஒன்றில் பேசுகையில் , சினிமாவில் நாங்கள் சாதித்து பல கோடி சொத்து வைத்திருப்பதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் வீடு, கார் எல்லாமே கடனில் வாங்கியது, எங்களுக்கு நிறைய கடன் இருக்கு, அதுவும் கொரோனா காலத்துல ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைக்காததால் ரொம்பவே கடனில் கஷ்டப்படுகிறோம்” என தெரிவித்த ராஜலக்ஷ்மி.

மேலும், கடன் பற்றி தானும் தனது கணவரும் பேசும் போது, நான் என் கணவரிடம் ​​ஒரு வேளை பேங்க்காரங்க வந்து வீட்டை பிடிங்கிட்டு போயிட்டா என்ன பண்றது என கேட்டேன் அதற்கு, அப்படியே சொந்த ஊரு பக்கமா போயிட வேண்டியது தான் என்று கணவர் செந்தில் கணேஷ் சொன்னதாக ராஜலட்சுமி மிக உருக்கமாக பேசி இருந்தார். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான செந்தில் – ராஜலஷ்மி தம்பதியினர் போன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் பாலா.

இவர், தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்து கொண்டிருக்கிறார். செந்தில் – ராஜலக்ஷ்மி தம்பதியினர் போன்று அவர்கள் உயரத்துக்கு செல்ல வில்லை என்றாலும் கூட, தன்னுடைய மிக கடினமான போராட்டத்திற்கு பின்பு தனக்கான ஒரு இடத்தை பிடித்து, தான் சம்பாரிக்கும் பணத்தில் பல உதவிகளை செய்து வருகின்றவர் கலக்கப்போவது யாரு பாலா.

வடிவேலு உடன் பல படங்கள் இணைந்து நடித்த காமெடி நடிகர் பாவா லட்சுமணன் என்பவர்,உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு, பொருளாதார ரீதியாக மிக பெரிய சிரமத்தில் இருந்து வந்த நிலையில், அவருடன் பல படங்கள் இணைந்து நடித்த வடிவேலு உட்பட பலரும் கண்டு கொள்ளாத நிலையில், பாவா லட்சுமணனுக்கு 30 ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார் பாலா.

மேலும் பாலா அவருடைய நண்பர்களுடன் சேர்த்து அறக்கட்டளை ஒன்றை அறந்தாங்கி அருகே நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளையில் தங்கி இருக்கும் வயதானவர்கள் மருத்துவமனை செல்வதற்கு சிரமப்பட்டு வந்த நிலையில், தன்னுடைய சொந்த பணத்தில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ள பாலா, அந்த ஆம்புலன்ஸ்கான பெட்ரோல் செலவுகளை பாலவே கொடுக்க இருக்கிறார். மேலும் இந்த ஆம்புலன்ஸ் அங்கிருக்கும் அறக்கட்டளையில் இருப்பவர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் இல்லாமல், சுற்றி இருக்கும் கிராம மக்களுக்கும் அவசரம் என்றாலும் இந்த ஆம்புலன்ஸ் இலவசமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல ஏழை குழந்தைகளை தன்னுடைய சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார் பாலா. இந்நிலையில் பின்னணி பாடகர்களான செந்தில் – ராஜலக்ஷ்மி தம்பதியினரிடம் ஒப்பிடும் போது, மிக குறுகிய சம்பளமே பாலா வாங்கி வருகிறார் என்றும் ஆனால், தனக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை பலருக்கு உதவி செய்து மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.

ஆனால் வெளிநாடு கச்சேரி, சினிமாவில் பாட்டு பாடுவது என பிசியாக செந்தில் – ராஜலக்ஷ்மி தாம்பத்தினர் இருந்தாலும், வீடு, கார் என கடனில் வாங்கிவிட்டு ஐயோ கடனில் கஷ்ட படுகிறோம் என புலம்புவதற்கு முன்பு, ஒரு வேலை தீடிரென வாய்ப்புகள் குறைந்தால், நம்மால் இதெல்லாம் சமாளிக்க முடியுமா என யோசித்து கடனுக்கு கார், வீடுகளை வாங்கியிருக்க வேண்டும் என பலரும் அறிவுரை கூறி வருவது குறிப்பிடதக்கது.