முத்தையா இயக்கத்தில், கார்த்திக் நடிப்பில், இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் சினிமாவில் அறிமுகமாகும் படம் விருமன். அதிதி சங்கர் குரலில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மதுரை வீரன் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மெலடி கலந்து ஆட்டம் போட வைக்கும் கிராமிய இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை அருமையாக பாடியுள்ளார் அதிதி சங்கர்.
இந்நிலையில் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள மதுரை வீரன் பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி தான் என்றும், ஆனால் இயக்குனர் சங்கர் மகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மதுரை வீரன் பாடலை அதிதி சங்கரின் குரலில் பட வைத்து, ஏற்கனவே ரெகார்டிங் செய்யப்பட்ட ராஜலக்ஷ்மி குரலை நீக்கிவிட்டார்கள். இது ஒரு பாடகியை அவமானப்படுத்தும் செயல் என சர்ச்சை எழுந்தது.
இந்த சர்ச்சைக்கு அதிக சங்கர் தரப்பிலிருந்து விளக்கம் கொடுத்துள்ளார்கள். அதாவது மதுரை வீரன் பாடலை முதலில் பாடியது அதிதி சங்கர் தான். ஆனால் அந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீண்டும் அதே பாடலை சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமியை அழைத்து பாட வைத்து ரெகார்டிங் செய்துள்ளார். ஆனால் இறுதியில் அதிதி குரலில் ரெகார்டிங் செய்யப்பட்டதை இறுதி செய்து பாடல் கம்போஸ் செய்துள்ளார்.
இதில் எங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை, ராஜலக்ஷ்மி குரலில் இந்த பாடலை ரெகார்டிங் செய்வதற்கு முன்பே அதிதி சங்கர் குரலில் ரெகார்டிங் செய்யப்பட்டு விட்டது என அதிதி சங்கர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில், மதுரை வீரன் பாடல் மெலடி கலந்த ஆட்டம் போட வைக்கும் கிராமிய பாடலாக வேண்டும் என்பது இயக்குனர் மற்றும் இசையமைப்பாளரின் விருப்பம்.
சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமியை அழைத்து அவருடைய குரலில் இந்த பாடல் ரெகார்டிங் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பாடலை கேட்கும் போது ஏற்கனவே ராஜலக்ஷ்மி பாடிய சின்ன மச்சான் சிவத்த மச்சான், புஷ்பா படத்தில் பாடிய ஓ சாமி பாடல் போன்று குத்து பாடலாகவும் இருந்துள்ளது, இதனால் தான் ராஜலக்ஷ்மி குத்து பாடலுக்கு தான் லாயக்கு, இது போன்ற பாடலுக்கு செட்டாக மாட்டார் என அவருடைய குரலை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அதிதி சங்கர் குரல் இந்த பாடலுக்கு ஏற்றார் போல் அமைந்து, டாக்டர் படித்த பெண் இது போன்ற கிராமத்து பாடலும் பட முடியுமா.?என பாரட்டை பெற்று வருகிறார். ஆகையால் அதிதி தன்னுடைய திறமையின் மூலம் தான் மதுரை வீரன் பாடலை பாடும் வாய்ப்பை பெற்றுளளர். ராஜலக்ஷ்மி வாய்ப்பை தட்டி பறித்துவிட்டார் என்று சொல்வது தவறு என்கிறது சினிமா வட்டாரங்கள்.