நடிகர் விஜய்க்கு சென்ற அதிர்ச்சி ரிப்போர்ட்..! அரசியல் ஆசையை கைவிட என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகின்றவர் நடிகர் விஜய், இவருக்கு நீண்ட காலமாக அரசியல் ஆசை உண்டு, ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் மன்றம் என பெயர் மாற்றம் செய்து, ரசிகர்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்து வருகின்றார் விஜய், அவரின் பெயரில் இயங்கும் விஜய் மக்கள் மன்றம் செயல்பாடுகள் அனைத்தும், விஜய் எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவது கூறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியல் பெரும் ஜாம்பவான்களாக இருந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் உயிருடன் இருக்கும் வரை சற்று அடக்கி வசித்து வந்த நடிகர் விஜய், இருவரின் மறைவுக்கு பின்பு குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்கு பின்பு, அவர் படத்தின் ஆடியோ நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது, அவர் நடிக்கும் படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் அமைப்பது, மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பது என தொடர்ந்து அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

நடிகர் விஜய் அரசியல் கருத்துக்கள் பெரும்பாலும், மத்திய பாஜக அரசு மற்றும் இதற்கு முன்பு தமிழகத்தில் ஆட்சியில் இருந்த எடப்பாடி அரசை சீண்டுவது போன்று அமைந்திருக்கும். இந்நிலையில் கடந்த வருடம் நடந்த வருமான வரித்துறை ரெய்டுக்கு பின் இது வரை இந்த ஒரு அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கவில்லை நடிகர் விஜய். இந்நிலையில் சமீபத்தில் துல்லியமாக கருத்துக்கணிப்புகளை வெளியிடும் நிறுவனம் ஒன்றை நேரில் அழைத்துள்ளார் விஜய்.

அப்போது தன்னை பற்றிய தமிழக மக்களின் நிலைப்பாடு என்ன, நான் அரசியலுக்கு வந்தால் தனக்கு எத்தனை சதவீகிதம் வாக்கு கிடைக்கும் என்கிற ரிப்போர்ட் வேண்டும் என தெரிவிக்க, அந்த பிரபல நிறுவனமும் உடனே களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டு, பின் அந்த ஆய்வின் ரிப்போர்ட்டை நடிகர் விஜய்க்கு கொடுத்துள்ளனர். அதில் சினிமாவையும் அரசியலையும் மக்கள் பிரித்து பார்க்க தொடங்கிவிட்டனர்.

நீங்கள் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டால் 5 சதவிகிதத்துக்கு குறைவாக அதாவது 3 முதல் 4 சதவீகிதம் வாக்குகளை மட்டும் தான் பெறமுடியும். உங்கள் ரசிகர்கள் உங்களுக்கு ஒட்டு போடுவார்கள், ஆனால் அவர்கள் குடும்பத்தினர் உங்கள் மீது வெறுப்பில் தான் இருந்து வருகின்றனர், தங்கள் பிள்ளை தருதலையாக சுற்றுவதற்கு காரணம் விஜய் தான் என்கிற வெறுப்பு அவர்களிடம் உண்டு, அதனால் உங்கள் ரசிகர் குடும்பத்தினர் வாக்கு கூட உங்களுக்கு விழாது.

40 வருடமாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் ரஜினிகாந்த் இதை அனைத்தும் அறிந்து தான் அவர் அரசியல் கட்சி தொடங்கவில்லை, அப்படியிருக்கையில் உங்களுக்கு தமிழக அரசியலில் மக்கள் மத்தியில் உங்களுக்கு வரவேற்பு இல்லை. என சர்வே ரிப்போர்ட் நடிகர் விஜய்யிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் மற்றம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மண்ணை கவ்வியுள்ளதை அறிந்து அரசியல் ஆசையை விஜய் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா வாழ்க்கையில் புகுந்து சடுகுடு விளையாடிய ஜோசியர்.. என்ன நடந்தது தெரியுமா.?