முடித்தது சங்கர் சினிமா வாழ்க்கை… படு மொக்கை கேம் சேஞ்சர்..

0
Follow on Google News

ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 மோசமான விமர்சனங்களை பெற்றது. இதனால் அதற்கு அடுத்ததாக வெளியாகும் கேம் சேஞ்சர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. படத்தில் இருந்து வெளியான ட்ரைலர் மற்றும் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்பதால் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது.

கார்த்திக் சுப்பராஜ் கதையை அடிப்படியாக வைத்து கேம் சேஞ்சர் படத்தை உருவாக்கி உள்ளார். அவரது முந்தைய படங்களான முதல்வன் மற்றும் சிவாஜி படத்தில் இருந்து நிறைய காட்சிகளை இதிலும் வைத்துள்ளார். முதல் பாதியில் உள்ள நிறைய காட்சிகள் அவரது பழைய படங்களை நியாபகப்படுத்தின. பல காட்சிகள் இரண்டாம் பாதியில் ஒட்டவில்லை. என்னதான் கமர்சியல் படம் என்றாலும், ஏகப்பட்ட இடங்களில் லாஜிக் மீறல்கள் உள்ளன.

பழைய ஷங்கரை பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் புலம்பும் சத்தம் தமனின் இசையை தாண்டியும் கேட்கிறது. ஒரு ஐஏஎஸ் மற்றும் அமைச்சரின் பவரை காட்டாமல், பல இடங்களில் வசனங்களின் மூலமே நகர்த்தி கொண்டு சென்றுள்ளனர். இந்தியன் 2 அளவிற்கு மோசம் இல்லை என்றாலும், கேம் சேஞ்சர் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம்.

கதையின் களம் எனப் பார்த்தால், எதிலும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஹீரோவைக் காதலி கட்டுப்படுத்துகிறார். கோவத்தை சரியான முறையில் காட்ட அவனை ஐபிஎஸ் ச் சொல்கிறார். அவரும் படித்து அதிகாரி ஆகியவுடன் சமூகத்தின் மீதான, ஊழல்வாதிகள் மீதான தனது கோவத்தை எப்படி காண்பிக்கிறார் என்றே கதை துவங்குகிறது.

பின்னர் அவருக்கும் ஊழலில் ஊறிப்போன, பதவி ஆசை தலைக்கேறிய அமைச்சரான எஸ்.ஜே. சூர்யாவுக்கு இடையேயான ஹீரோயிக் அரசியல் சண்டையாக கதை விரிகிறது. ஐஏஎஸ் அதிகாரியான ராம்சரண் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கலெக்டராக பதவி ஏற்கிறார். அங்கு நடக்கும் மணற்கொள்ளை, ரவுடிகள் அட்டகாசம் போன்ற அநியாயங்களை தட்டி கேட்கிறார்.

இதனால் அமைச்சராக இருக்கும் எஸ்ஜே சூர்யாவிற்கும், ராம் சரணிற்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் அமைச்சர் எஸ்ஜே சூர்யாவை அடித்து விடுகிறார் ராம்சரண். இதனால் அவருக்கு சஸ்பென்ஷன் கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பதே கேம் சேஞ்சர் படத்தின் கதை.

இயக்குனர் ஷங்கர் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே அரசியல் கதைகளையே அதிகம் இயக்கி இருக்கிறார். அதேபோல் அவர் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு சமூக நோக்கம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். அதுவே அவரை ஒரு தனித்துவமான இயக்குநராக நிறுத்தியுள்ளது. இந்த முறை தெலுங்கில் நேரடி படம், ராம் சரணுடன் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம்.

அந்த விஷயம் அவருக்கு தெரியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவரது படங்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. இந்த படத்தின் கதையும் எளிதில் யூகிக்கக் கூடியதாக உள்ளது. கதை எப்படி இருந்தாலும், திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த படத்தில் கதையும், திரைக்கதையும் மிகவும் மந்தமாக நகர்கின்றன. குறிப்பாக முதல் பாதி நாயகனுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. மிகவும் பேசிக்கொண்டே இருப்பதால் எந்த வித ஈர்ப்பும் இல்லை. பிரம்மாண்டம் கவர்ந்திழுத்தாலும், கதை சுவாரஸ்யமாக இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here