நடிகர் அஜித் குமாருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது, வழங்கப்பட்டுள்ளது, இந்நிலையில் அஜித் ரசிகர்கள், அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கியதை கொண்டாடி வந்தாலும் கூட, அஜித்க்கு என்ன தகுதி உள்ளது அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கு அளவுக்கு அவர் என்ன சாதித்து விட்டார் என்கிற விமர்சனம் எழுந்து வருகிறது.
இந்நிலையில் அஜித் அவருடைய சினிமா துறையில் கூட ஒவ்வொரு காலகட்டத்தில் அவருக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி உணர்வோடு இருந்ததில்லை, இதில் குறிப்பாக எஸ் பி பாலசுப்பிரமணியன் இல்லையென்றால் அஜித் இன்று தமிழ் சினிமாவிலேயே இல்லை என்கின்ற வரலாறு பலருக்கு தெரியாது. அமராவதி படத்தின் இயக்குனர் செல்வா அந்த படத்தை தொடங்கிவிட்டார்,
ஆனால் அந்த படத்தின் கமிட் செய்யப்பட்ட நடிகர் முறையாக ஒத்துழைக்கவில்லை, இதனை தொடர்ந்து எஸ்பி பாலாவிடம் செல்வா தான் எடுக்க போகும் அமராவதி படத்திற்கு சிகப்பாக அழகான ஒரு பையன் வேண்டும் என கேட்கிறார், அதற்கு எஸ் பி பாலா தெலுங்கு சினிமாவில் ஒரு பையன் நடித்து வருகிறான், அவன் சென்னை மந்தவெளியில் தான் இருக்கிறான் என அஜித்தை கை காட்டுகிறார்.
அப்போது அஜித்துக்கு தமிழ் கூட சரியா தெரியவில்லை இருந்தும் எஸ்பிபி கைகாட்டிய அஜித்தை இயக்குனர் செல்வா அமராவதி படத்தில் கமிட் செய்கிறார். அப்படித்தான் அஜித் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆகிறார் அஜித். அதன் பின்பு அஜித்தின் சினிமாவின் அசுர வளர்ச்சியை அனைவரும் தெரிந்தது. அப்படி அஜித்துக்கு மிகப்பெரிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த எஸ்பிபி மறைவுக்கு கூட அஜித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை.
ஒருவேளை எஸ் பி பி மறைந்த போது கொரோனா பரவல் காரணமாக அஜித் நேரில் செல்லவில்லை என்றாலும் கூட ஒரு இரண்டு வரியில் இரங்கல் தெரிவித்து இருக்கலாம், அல்லது அவருடைய புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்து இருக்கலாம், ஆனால் ஒரு விசித்திரமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அஜித் இதுவரை எஸ் பி பிக்கு எந்த ஒரு இரங்களும் தெரிவிக்கவில்லை.
தமிழ் சினிமாவில் அதி முக்கியமானவராக திகழ்ந்த விஜயகாந்த் மறைவுக்கு இதுவரை இரண்டு வரியில் இரங்கல் கூட தெரிவிக்காத அஜித்தின் நடவடிக்கைள் குறித்து கடுமையாக அஜித்தை மக்கள் விமர்சனம் செய்தாலும் கூட இது குறித்து கொஞ்சம் கூட அஜித் கவலை படப்போவதில்லை என்பது போன்று, என்னைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள் நான் படம் நடிக்கிறேன் ஏன் படத்திற்கான வியாபாரம் இருக்கு என, தனக்கு எதிராக வரும் மக்களின் கோபக் குரலை அஜித் காதில் வாங்குவதாக தெரியவில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
அப்படி மக்களின் மனநிலையை அஜித் புரிந்து கொண்டிருந்தால் அந்த மக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தற்பொழுது கூட விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி இருப்பார் அஜித். விஜயகாந்துக்கு மறைவுக்கு மட்டுமா அஜித் போகவில்லை, பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன், மயில்சாமி மனோபாலா என அஜித்துக்கு நெருக்கமானவர்கள் பலர் மறைவுக்கு அவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இதில் குறிப்பாக எஸ் பி பாலசுப்பிரமணியன் இல்லையென்றால் அஜித் இன்று தமிழ் சினிமாவிலேயே இல்லை என்கின்ற வரலாறு பலருக்கு தெரியாது.