அம்பானி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து மண்ணை கவ்விய ரஜினிகாந்த் மகள்… ரஜினி சம்பாரிச்ச பணமெல்லாம் அபேஸ்..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் சம்பாரித்த சொத்துக்களை பாதுகாத்தால் மட்டுமே அவருடைய இரண்டு மகள்களும் ஆஹா..ஓஹோ..என்று வாழலாம், ஆனால் இரண்டு மகள்களும் போட்டி போட்டு கொண்டு ரஜினிகாந்த் சம்பாரிக்கும் பணத்தை அழித்து கொண்டு வருகிறார்கள் என்றே சொல்லலாம். மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில், 3 படம் எடுத்து மிகப்பெரிய நஷ்டம்,

இதனை தொடர்ந்து மியூசிக் ஆல்பம் தயாரிக்கிறேன் என்கிற பெயரில் வெளிநாடுகளுக்கு சென்று வீண் செலவு செய்துஐஸ்வர்யா ஒரு பக்கம் தந்தையின் பணத்தை ஐ காலி செய்து கொண்டிருக்கையில், மறுபக்கம் இரண்டாவது மகள் சௌந்தர்யா தனது தந்தையை வைத்து அனிமேசன் படம் எடுக்க விரும்பி பெரிய பட்ஜெட்டில் கோச்சடையான் படத்தை எடுத்து மிகப்பெரிய நஷ்டத்தை தந்தை ரஜினிகாந்துக்கு பரிசளித்தார் சௌந்தர்யா.

இதன் பின்பு சௌந்தர்யா இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி 2 பெரும் நஷ்டம், இத்துடன் சினிமா பக்கமே வர கூடாது என தந்தை தெரிவிக்க, அடுத்ததாக பல கோடி முதலீட்டில் ஹூட் என்கிற செயலி ஒன்றை அறிமுகம் செய்தார். இது பேஸ்புக், டிவீட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு இணையாக வரவேற்பு பெற்று தானும் ஒரு தொழில் அதிபர் என பெயர் பெற்று விடலாம் என நினைத்த சௌதார்யாவுக்கு ஆரம்பம் முதலே பெரும் நஷ்டம் மட்டுமே ஏற்பட்டு வந்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தொடங்கிய ஹூட் என்கிற குரல் சமூக ஊடகமாக தளத்தை ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார். தமிழ் உள்ளிட்ட 15 இந்திய மொழிகள் மற்றும், சர்வதேச மொழிகளிலும் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆப் படிக்காதவர்கள் கூட எளிமையாக குரல் வழியாக தங்களின் கருத்தை தெரிவிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஒருவர் ஒரு தொழில் தொடங்கவேண்டும் அந்த தொழிலை முதலில் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு மார்க்கெட் செய்ய வேண்டும், ஆனால் ரஜினிகாந்த் மக்களுக்கு அந்த பிரச்சனையெல்லாம் கிடையாது, அவருடைய தந்தை மிக பெரிய சூப்பர் ஸ்டார் என்பதலால் அவரே முதன் முறையாக முதல் மெசேஜை கொடுத்து தொடங்கி வைத்தது மிக பெரிய செய்தியாக வெளியானது, அதுவே அந்த ஆப்க்கு மிக பெரிய விளம்பரமாக அமைத்தது.

மேலும் சௌந்தர்யா அவருடைய தந்தை ரஜினிகாந்த் செல்வாக்கை பயன்படுத்தி, ஏஆர் ரகுமான், ஆனந்த் மகேந்திரா, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், கௌதம் கம்பீர் உள்ளிட்ட பலரையும் இணைய வைத்தார், அந்த வகையில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடக தங்களுக்கு டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆப்பை பயன்படுத்தும் பயனாளர்கள் எண்ணிக்கை குறைந்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருந்தது.

இதனை தொடர்ந்து தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்த ஹூட்டை இழுத்து மூட முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா என கூறப்படுகிறது. இந்நிலையில் ஒருவர் ஒரு தொழில் தொடங்குகிறார் என்றார், அதற்கான பணத்தை அவரே சம்பாரித்து இருந்தால் அந்த பணத்தின் அருமை தெரியும், அல்லது அம்பானி வாரிசுகளை போன்று தொழில் அனும்பவம் அல்லது தான் தொடங்கிய தொழில் மேல் ஒரு பற்று இருக்க வேண்டும்,

ஆனால் ரஜினிகாந்த சம்பாரித்த பணத்தில், ரஜினிகாந்த் புகழை பயன்படுத்தி எளிதாக தொழில் தொடங்குவது, சினிமா படம் தயாரிப்பது என முன் அனுபவம் இல்லாமல் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும் போட்டி போட்டு அவருடைய தந்தை ரஜினிகாந்த் சம்பாரித்த பணத்தை அழித்து கொண்டிருக்கிறார்கள் என்கிற விமர்சனம் பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.