வேட்டையனில் பெருசா ஒன்றும் இல்லை.. சுமாரான கதை.. ஆனாலும் படம் ஏன் நல்லா இருக்கு தெறியுமா.?

0
Follow on Google News

வேட்டையன் மாதிரி கதைகளத்துல தமிழ் சினிமால நூறு படம் பார்த்திருப்போம். வேட்டையன் அதுல இருந்து வேறுபடுதான்னு கேட்டா நிச்சயமா இல்லை. ஆல்ரெடி பாத்து ரசிச்ச பழைய படங்களோட சீன்கள் தான் எல்லாமே வச்சிருக்காங்க. புதுமையா சொல்லிக்கிற மாதிரி எதுவுமே படத்துல இல்லை. வில்லன் தப்பு பன்றான். ஹுரோ அவனை காலி பன்னனும். என்ன வகையான க்ரைம் என்பதும், க்ரைம் நடக்குற ஊரையும் மாத்தி எடுத்தா போதும்ன்ற ரேஞ்ச் க்கு சுமாரான கதையை ரெடி பன்னிருக்காங்க.

அதுல ரஜினி உட்பட எல்லாரும் ரொம்ப சிறப்பா நடிச்சி அசத்தியிருக்காங்க. ட்விஸ்ட் ன்னு சொல்லி ஒரு விசயத்தை அழுத்தமா உண்மை போலவே நம்ப வைக்கிறாங்க. அப்புறம் இன்னொரு காட்சில அது அப்படியில்லை .. இப்படி ன்னு காமிச்சா அது எப்படி ட்விஸ்ட் ஆகும்ன்னு படக்குழு நம்பினாங்கன்னு தெரில. இதை அருண்விஜய் நடிச்ச தடம் மூவில கூட ரொம்ப சுவாரஸ்யமா காமிச்சிருப்பாங்க. அந்த பீல் இங்க கிடைக்கல. ஒருவேளை தடம் மூவி பாக்காதவங்களுக்கு வேட்டையன் ட்விஸ்ட் பிடிக்க வாய்ப்பிருக்கு.

க்ளைமேக்ஸ்ல மக்கள் கிட்ட இருந்து சின்ன கைதட்டல் கூட வராத அளவுக்கு ரொம்ப சாதாரணமா பன்னிருக்காங்க. நல்லாருக்கா நல்லாயில்லையான்ற குழப்பத்துலயே திரேட்டரை விட்டு வெளியே போறாங்க. மஞ்சுவாரியரும் ரக்சனும் மொத்தமே மூனு நிமிசத்துக்கும் குறைவா தான் வராங்க. கூடுதலா அவங்களுக்கு ரோல் கொடுத்திருக்கலாம்.

ஆயுதபூஜை, விஜயதசமி ன்னு வரிசையா அடுத்த நாலுநாட்கள் விடுமுறை இருப்பது மட்டுமே லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும்பலம்.மொத்தத்துல படம் ஆக்சன் மூவியா நல்லாருக்கும். ஆனா இன்னும் புதுமையா நல்லா எடுத்திருக்கலாம். கதை சொல்ல வேண்டுமாயின் நிச்சயம் அங்கே கமர்சியல், ஹீரோயிசத்துக்கு வேலை இருக்காது அல்லது முடியாது என்கிற டெம்ப்ளேட்டை உடைத்து கமர்சியலும், கதையும் ஒரு சேரக் கலந்தால் நிச்சயம் நல்லதொரு படம் கிடைக்கும் என்பதற்கு ‘ வேட்டையன்‘ படம் சிறந்த எடுத்துக்காட்டு.

ரஜினி படமாகப் பார்த்தால் ரஜினிப் படம், இயக்குநர் ஞானவேல் படமாகப் பார்த்தால் ஞானவேல் படம். பாலிவுட்டில் ரசிகர்கள் அமிதாப் பச்சன் படமாக பார்த்தால் நிச்சயம் அவர்களுக்கு இது அமிதாப் படமாகவும் இருக்கும். என்பதில் சந்தேகமில்லை.

எந்த இடத்துலயும் வேகம் குறையவேயில்லை. விறுவிறுப்பா போய்கிட்டே இருக்கு. இயக்குநர் ஹரியோட படத்தை பாத்த மாதிரி ஒரு பீலிங், கன்னியாகுமரில ஆரம்பிச்சி சென்னைல முடிச்சிருக்காங்க. போலிஸ் கெட்டப்ல ரஜினியை ஜெயிலர் படத்துல காமிச்சதை விட இதுல அழகா காமிச்சிருக்கார் இயக்குனர் ஞானவேல். படத்தோட ஆரம்பத்துல ஒரு க்ரைம் க்காக வேட்டை ஆடுறார். அப்புறம் அதைவிட ஒரு பெரிய க்ரைம் நடக்குறது தெரியவரவும் கதை அதை நோக்கி நகருது.

இன்டர்வல் டைம்ல யாரும் எதிர்பாக்காத வகைல ஒரு ட்விஸ்ட் வச்சிருக்காங்க. ஆடியன்ஸ் மொத்தமா ஷாக்கிங். பகத் பாசில் நடிப்பும் அவரோட ரோலும் படத்துல ரஜினிக்கு இணையா இருக்குன்னே சொல்லலாம். மஞ்சுவாரியரும், ரக்சனும் ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. அவங்க வர்ர சீன் எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கும். அனிருத் வழக்கமான இரைச்சலை கொஞ்சம் கம்மி பன்னிருப்பதால் கொஞ்சம் கேட்பது போன்று உள்ளது இசை.

ஒரு வேடன் கிட்ட ஒரு வேலை கொடுத்த என்ன செய்வானோ அதை கர்க்டா செஞ்சு முடிஞ்சிருக்கார் தலைவர் ரஜினிகாந்த்… தர்பார் & ஜெயிலர் என்று எல்லாரும் நினைச்சாங்க ஆனால் இது வேற களம்…போலிஸாக குற்றங்களை கண்டுபிடிக்கும் என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் ரஜினிகாந்த் ..இவருக்கே தவறி ஒரு தப்பு நடக்குது அதை கண்டுபிடிக்க வேப்பமரம் எறி வேதாளம் பிடிச்ச கதையா வளர்கிறது குற்றங்கள் அதை எப்படி முறியடித்தார் தன் தவறை அந்த பையனோட பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு அந்த பையன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை தூய்மைபடுத்துவதே இந்த வேட்டையன்..குறிப்பாக ஒரு சீன் வச்சுருக்காங்க என் கவுண்டர் இப்படிதான் பண்ணுவாங்கன்னு அந்த சீனுக்கே படம் ப்ளாக் பாஸ்டர்.. மொத்தத்தில் வேட்டையன் பற்றி உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.