ஆழ்ந்த தியானத்தில் ரஜினிகாந்த்… வீட்டில் இல்லை.. எங்கே இருக்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கடும் போராட்டத்திற்கு பின்பு தமிழக மக்களால் அங்கீகரிக்கப்பட்டு நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர். எம்ஜிஆருக்கு பிறகு அடுத்த தமிழகத்தின் முதல்வராகும் அளவுக்கு தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் தீவிர சிகிச்சைக்கு சிங்கப்பூர் சென்றவர், தமிழக மக்களின் பிரார்த்தனையின் பலனாக உயிர் பிழைத்து மறுபிறவி எடுத்து வந்தார்.

ரஜினிகாந்த் சிங்கப்பூர் சிகிச்சை மேற்கொண்ட பின்பு அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மிக கவனமாக கையாளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு ஜாதகத்தின் மீது அதீத நம்பிக்கை உண்டு. மேலும் ரஜினிகாந்த் மிகத் தீவிர ஆன்மீகவாதியும் கூட, அந்த வகையில் அடிக்கடி அவர் இமயமலை செல்வது, இந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் சென்று வழிபட்டு வருவது என்று தொடர்ந்து செய்து வரக்கூடியவர் ரஜினிகாந்த்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை கிட்ட தட்ட முடித்துவிட்டு, அடுத்து லால் சலாம் படத்தில் நடிக்க இருக்கும் ரஜினி அதற்கு முன்பு தற்பொழுது மன நிம்மதிக்காக பெங்களூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்திற்கு சென்று அங்கேயே தங்கி யோக போன்ற ஆழ்ந்த தியானத்தில் தற்பொழுது ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு மன நிம்மதிக்காக இமயமலை சென்று வந்த ரஜினிகாந்த, தற்பொழுது உடல்நிலை கருத்தில் கொண்டு, இமயமலை செல்வதை தவிர்த்து, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் தங்கி தீயனம் செய்து வருகிறார். விரைவில் புத்துணர்ச்சி பெற்று லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ரஜினிகாந்த்.