இயக்குனர் சிவாவின் வீட்டுக்கே சென்ற ரஜினி அவருக்கு தங்க சங்கிலி பரிசளித்துள்ளார். ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த திரைப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்தது சன் பிக்சர்ஸ். இந்த படத்தின் மூலம் வசூலை அள்ள தீபாவளி நாளில் அதிக திரைகளில் ரிலீஸ் செய்தது. முதல் நாளும் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது.
படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வர ஆரம்பித்ததும் வசூல் அடுத்தடுத்த நாட்களில் படுத்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் தமிழகம் எங்கும் பெய்த கனமழையால் தியேட்டர்களில் ஈயாடவில்லை. திரையரங்க உரிமையாளர்களே அடுத்த படங்கள் எப்போது ரிலிஸாகும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மோசமான விமர்சனங்கள் மற்றும் மழை காரணமாக வசூல் குறைந்தாலும் மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாது என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் சிவாவை ரஜினி அவரின் வீட்டுக்கே சர்ப்ரைஸாக சென்று சந்தித்து அவருக்கு தங்க சங்கில் பரிசளித்துள்ளார். இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.