நடிகர் விஜய் லண்டனிலிருந்து ரோல்ஸ் ராயல்ஸ் சொகுசு காரை 2012 ஆண்டு இறக்குமதி செய்துள்ளார். இந்த சொகுசு காருக்கான நுழைவு வரிக்கு விளக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நடிகர் விஜயை சினிமா நடிகர்கள் வாழ்க்கையில் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோவாக இருக்க கூடாது, என்றும் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாயை அபராத தொகையாக கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நேற்று எம் துரைசாமி மற்றும் ஆர்.ஹேமலதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் விஜய் தரப்பில் ஆஜரான வக்கீல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது நுழைவு வரி வசூலிக்க கூடாது. தனி நீதிபதி வைத்த விமர்சனம் ஏற்புடையதாக இல்லை என்று கூறினார். இதையடுத்து தனி நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
தனி நீதிபதி உத்தரவிட்ட அபராத தொகையை தன்னால் செலுத்த முடியாது என்று நடிகர் விஜய் மறுத்துவிட்டார். கடந்த ஆண்டு கொரோனா நிவராண நிதிக்கு 25லட்ஞம் வழங்கியுள்ளதால் மீண்டும் வழங்க முடியாது விஜய் கூறியுள்ளார்.