அவர்களை பாருங்கள்…. பா. ரஞ்சித் – மாரிசெல்வராஜூக்கு தக்க பதிலடி கொடுத்த கே ராஜன்..

0
Follow on Google News

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தற்பொழுது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் மாமன்னன், இந்த படத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனகளை பெற்றுள்ளது, குறிப்பாக மாரிசெல்வராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் எந்த ஒரு எதிர் விமர்சனம் இல்லாமல் மிக பெரிய வெற்றியை பெற்றது.

ஆனால் மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் தேவர் மகன் குறித்து சர்ச்சை கூறிய வகையில் மாரிசெல்வராஜ் பேசியது, மாமன்னன் படம் மிக பெரிய சச்சையில் சிக்கியது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி அந்த படம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகையில் , சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் பேட்டி ஒன்றில் பேசுகையில்.

பட்டியல் இன சமூக மக்களை நிற்க வைக்கிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள் என்று படம் எடுத்தால் படம் பார்க்கின்ற சகோதரர்கள் எங்க சட்டமன்ற உறுப்பினர் நிற்கவைக்கின்றாரா.? என வெறிகொண்டு எழுந்தால் என்ன ஆவது. இன்று பட்டியல் சமூகத்தில் எவ்வளவோ டாக்டர், கலெக்டர் போலீஸ், அதிகாரிகள் என பெரிய இடத்திற்கு சென்று விட்டார்கள்.

காமராஜர் காலத்தில் இருந்து அவர்களுக்கு சலுகை கொடுத்து மிகப்பெரிய உயரத்திற்கு சென்று விட்டார்கள். இருந்தாலும் இன்னும் கீழே இருப்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அப்படி கீழே இருப்பவர்களிடம். இப்ப உள்ள தலைவர்கள் மற்றும் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற படம் எடுக்கின்றவர்கள். இன்று நம்மில் பல பேர் உயர்ந்து விட்டார்கள். ஆனால் இன்னும் நம்மில் சிலர் கீழே தான் உள்ளார்கள்.

அடிமை மாதிரி இருக்கிறீர்கள், அதை அடுத்தவன் ஆக்குகின்றானா.? நீங்கள் ஆக்குகின்றானா.? என்பது வேற, ஆனால் அவர்கள் என்ன சொல்ல வேண்டும். அந்த மக்களை நல்லா படி, அரசாங்கம் அனைத்து சலுகைகளும் கொடுக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். இதில் பிராமணர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. இருந்தாலும் படித்து அவர்கள் முன்னேறுகிறார்கள்,

அதை பட்டியல் சமூக மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும், இவ்வளவு சலுகை உங்களுக்கு அரசாங்கம் தருகிறது, நன்றாக படித்து உயர் பதவிக்கு வாங்க. முடியவில்லை என்றால் போராடு என்கின்ற கருத்தை சொல்ல வேண்டும், இது போன்ற கருத்தைத்தான் சொல்ல வேண்டும் மற்றபடி இன்னும் நம்மை அடிமையாக வைத்துள்ளார்கள் என்பதை இப்போது ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் இதற்கு முன்பு நடந்ததையே சொல்லிக் கொண்டே இருப்பீர்கள் என பேசிய கே ராஜன், மேலும் அனைத்து சமுதாயத்திலும் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள், அதற்கு என்ன வழி என்பதைத்தான் தீர்வு காண வேண்டும். அதை விட்டுவிட்டு தூண்டி விடக் கூடாது, நம்மளுடைய சினிமாக்காரர்கள் பொதுவாக இருந்து அனைத்து மக்களும் சமம் என்று நல்ல கதைகளை உருவாக்கி உருவாக்க வேண்டும் என தெரிவித்த கே ராஜன்.

மேலும் இன்னும் பட்டியல் சமூகத்தினர் முன்னேறவில்லை என்று தெரிவிப்பது ஒரு தவறான ஒரு எண்ணத்தை உருவாக்குகிறது. நாம் அனைவரும் ஒன்றாக இருக்கின்றோம் சில கிராமங்களில் தவறுகள் நடக்கிறது ஆனால் பெரும்பாலான கோயில்களில் அனைவருக்கும் உரிமை உண்டு, சினிமா திரையரங்குகளில் எந்த ஒரு சாதி பாகுபாடு வித்தியாசம் கிடையாது, அலுவலகத்தில் பட்டியல் சமூகத்தினர் உயர்ந்த பதவியில் இருந்தால் மற்ற பிராமணர் சமூகத்தினர் உட்பட அவருக்கு கைகட்டி வேலை பார்க்கும் காலமாக மாறிவிட்டது என கே ராஜன் அறிவுரை வழக்கியுள்ளார்.