என்கிட்ட வெச்சுக்காதீங்க… தமிழ் சினிமாதுறைக்கு வார்னிங் கொடுத்த தில் ராஜ்..

0
Follow on Google News

இயக்குனர் சங்கருக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது, அதாவது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தது, இந்த நிலையில் இந்தியன் 2 தொடர்பாக சங்கருக்கும் லைக்காவுக்கும் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சங்கர் மீது லைக்கா நிறுவனம் தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் ஒன்றை கொடுத்தது.

அதில் சங்கர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் கேம் சேஞ்சர் படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது இந்தியன் 3 படத்தை முடித்து கொடுக்காத சங்கர் அதற்குள் கேம் சேஞ்சர் படத்திற்கு சென்று விட்டார். அந்த வகையில் கேம் சேஞ்சர் படத்திற்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று புகார் ஒன்றை தயாரிக்க நிறுவனம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியன் 3 என்பது லைக்காவுக்கும் இயக்குனர் சங்கருக்கும் இடையில் நடக்கும் பிரச்சனை. அப்படி இருக்கும் பொழுது கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தது தில்ராஜ், இந்தநிலையில் இது தில்ராஜ் படம், சங்கர் இயக்குனராக மட்டுமே அங்கே பணியாற்றி சம்பளம் பெற்றுக் கொண்டார். இப்படி இருக்கையில் தமிழில் இந்தியன் 3 படத்தை முடித்து கொடுக்கவில்லை என்றால், அடுத்து சங்கர் வைத்து எந்த தயாரிப்பு நிறுவனமும் படம் எடுக்கக் கூடாது, என்கின்ற ஒரு கட்டுப்பாட்டை வேண்டுமானாலும் விதிக்கலாம்.

ஆனால் கேம் சேஞ்சர் படத்தை தமிழில் வெளியிடுவதற்கு தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் புகார் கொடுப்பது எந்த விதத்திலும் இது சரிப்பட்டு வராது என்கின்றது கேம் சேஞ்சரில் தயாரிப்பு தரப்பு, ஆனால் லைக்காவுக்கு சாதகமாக கவுன்சில் ஒரு பக்கமும் பெடரேஷன் ஒரு பக்கமும் கேம் சேஞ்சருக்கு ரெட் போட்டு தடை செய்ய வேண்டும் என்ற பேச்சு வார்த்தையும் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் அறிந்த தில்ராஜ் கூலாக வருவதை பார்த்துக் கொள்வோம், என்று கடந்து சென்றாலும், உள்ளுக்குள் காடும் கோவத்திலும் இருக்காராம் தில்ராஜ். காரணம் தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சில், சங்கருக்கும் லைக்காகும் இடையில் பிரச்சனையை சங்கரை அழைத்து தான் விசாரித்து இருக்க வேண்டும். ஆனால் என்னுடைய தயாரிப்பில் வெளியாகும் கேம் சென்டர் படத்தை எதுக்கு கை வைக்க வேண்டும் என்ற கோபத்தில் இருக்கும் தில்ராஜ்.

மேலும் ஆந்திராவில் திரையரங்கு, விநியோகஸ்தர் என ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சில்ராஜ், கேம் சேஞ்சர் படம் தமிழ்நாட்டில் வெளியாவதற்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், ஆந்திராவில் ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் ஆகாது என்று மறைமுக வார்னி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சிலிங், மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறைக்கும் தில்ராஜ் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் லைக்கா என்கின்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகின்ற பெயரில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் எதிரான ஒரு விஷயத்தை நிச்சயம் தயாரிப்பாளர் கவுன்சில் செய்யாது என்றும், அந்த வகையில் தில்ராஜின் வானிற்கு நிச்சயம் அடிபணிந்து கேம் சேஞ்சர் படத்திற்கு கவுன்சில் தடையாக இருக்காது என்று கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here