பிரேம்ஜிக்கு மாமியார் வயது… மனைவிக்கு மகள் வயது… இதுக்கு தான் இளையராஜா திருமணத்துக்கு வரவில்லை…

0
Follow on Google News

தன்னுடைய 45 வயதில் இந்து என்கின்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் பிரேம்ஜி, லண்டனில் மியூசிக் கற்று இசையில் கைதேர்ந்தவர் என்றே சொல்லலாம். ஆனால் அவர் தன்னுடைய விளையாட்டுத்தனத்தை ஓரம் கட்டி விட்டு இசையில் முழு கவனம் செலுத்தி இருந்தால், இன்று மிகப்பெரிய இசையமைப்பாளராகவே உருவெடுத்து இருந்திருப்பார்.

பிரேம் ஜி உடன் பழகியவர்கள் யாருமே அவரை குறை சொல்ல முடியாத அளவுக்கு வெகுலியாக எந்த ஒரு வஞ்சகம் இல்லாமல் பழகக்கூடிய ஒரு அற்புதமான மனிதர் தான் பிரேம்ஜி. இந்த நிலையில் நீண்ட காலமாக முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜி கொரோனா காலகட்டத்தில் அவருடைய instagram பக்கத்தில் அவர் தற்பொழுது கரம் பிடித்துள்ள காதல் மனைவி பிரேம்ஜியின் பதிவுக்கு கீழே கமெண்ட் செய்து வந்துள்ளார்.

அந்த கமெண்ட்க்கு பிரேம் ஜியும் ரிப்ளை செய்து வந்துள்ளார் இது இவர்களுக்குள் ஒரு ஆழமான நட்பாக மாறியுள்ளது.தீடிரென இவர்கள் இருவரும் சுமார் ஒரு வருடம் எந்த மெசேஜ் செய்யாமல் அவரவர் வேலையில் பிசியாக இருந்துள்ளனர். பின்பு ஒரு வருடம் கழித்து மீண்டும் பிரேம்ஜியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த இந்து, என்னை உங்களுக்கு தெரியவில்லையா.? என கேட்க. உங்களை எப்படி மறப்பேன் உங்களை எனக்கு நன்றாக தெரியும் என பிரேம்ஜி தெரிவிக்க மீண்டும் இவர்கள் இணையதள நட்பு தொடர்ந்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் நேரில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்து சந்தித்த முதல் சந்திப்பிலே, இருவருக்கும் காதல் மலர்ந்த மலர்ந்துள்ளது. பிரேம்ஜி திருமணம் செய்து கொண்ட இந்து என்கின்ற பெண் ஒரு வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். அவருடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம் எனக் கூறப்படுகிறது. அவருடைய அம்மா காய்கறி கடை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் ஸ்டேட்டஸ் பற்றி எல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் இந்துவை காதலித்து உள்ளார் பிரேம்ஜி. அதே நேரத்தில் 25 வயதாகும் இந்து 45 வயதாகும் பிரேம்ஜியை வயது வித்தியாசம் பார்க்காமல் அவருடைய நல்ல மனதை அறிந்து காதலித்து உள்ளார் , இவர்கள் இருவருக்கும் சுமார் 20 வருட வயது வித்தியாசம். இதில் இந்துவின் அம்மா, அதாவது பிரேம்ஜியின் மாமியாருக்கும் பிரேம்ஜிக்கும் ஒரே வயது என்று கூறப்படுகிறது.

இருவரும் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே தங்களுடைய காதலை இரண்டு வீட்டாரிடம் தெரிவித்து கடந்த ஒன்றரை வருடங்களாக லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திருத்தணியில் நடந்த பிரேம்ஜி திருமணத்தில் பெரியப்பா இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் ஏன் கலந்து கொள்ளவில்லை என்கின்ற மிகப்பெரிய விவாதம் எழுந்தது. இந்நிலையில் 84 வயதாகும் இளையராஜா சமீப காலமாக இயற்கை முறையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதாவது அவரால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்றும். பொதுவாக ஒரு நாள் முழுவதும் தன்னுடைய ஸ்டூடியோவில் இருக்கும் இளையராஜா,

தற்பொழுது காலை ஸ்டூடியோக்கு சென்று விட்டு மதியம் 11 மணிக்கு எல்லாம் திரும்பி விடுகிறார் மீண்டும் 5:00 மணிக்கு தான் ஸ்டூடியோ வருகிறார். மதியம் 11 மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை அவருக்கு இயற்கை மருத்துவ சிகிச்சை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் பிரேம்ஜி திருமணத்தன்று ஏற்கனவே இளையராஜா ஒப்புக்கொண்ட ஒரு மியூசிக் கான்செப்டில் பங்கு பெற இருந்ததால் அந்த திருமணத்தில் இளையராஜாவால் கலந்து கொள்ளவில்லை என்றாலும் மனமகன் பிரேம்ஜி மற்றும் மணமகள் இந்துவை நேரில் அழைத்து இளையராஜா வாழ்த்தியுள்ளார்.

அதே போன்று யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறியதில் இந்து கோவிலுக்கு செல்வதில்லை என்கின்ற வழக்கத்தை கடைப்பிடித்து வருவதால், திருத்தணி கோவிலில் நடைபெற்ற பிரேம்ஜி திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது இருந்தாலும் மணமகன் பிரேம்ஜி மற்றும் மணமகள் இந்துவை தான் இருக்கும் துபாய்க்கு விருந்துக்கு யுவன் அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here