பிரேம்ஜிக்கு அவரது காதல் மனைவிக்கு 20 வயது வித்தியாசம்… இருவருக்கு இடையில் காதல் மலர்ந்தது எப்படி தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமாகி பின்னர் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் பிரேம்ஜி அமரன். இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி, 45 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது பிரேம்ஜி விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து வந்தாலும் அவரை பார்ப்பவர்கள் கோட் பட அப்டேட் கேட்கிறார்களோ இல்லையோ, முதலில் கேட்பது எப்போ கல்யாணம் என்பது தான்.

இப்படி கல்யாணம் பற்றி தொடர்ந்து கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு சர்ப்ரைஸாக ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிரேம்ஜி தன் திருமண பத்திரிகையையும் இணையத்தில் பகிர்ந்தார். முதலில் இது ஏதேனும் படத்தின் புரமோஷனாக இருக்கும் என சிலர் எண்ணி வந்த நிலையில், பிரேம்ஜிக்கு நிஜமாகவே திருமணம் ஆகப்போகிறது என்பதை இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய அறிக்கை மூலம் உறுதிப்படுத்தினார்.

பிரேம்ஜியின் தனது நீண்ட நாள் காதலியான இந்துவை கடந்த ஜூன் 9-ந் தேதி திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இருப்பினும் பிரேம்ஜியின் பெரியப்பா இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. இது இணையத்தில் பேசு பொருள் ஆனது.

இது குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், “முரட்டு சிங்கிள் பிரேம்ஜிக்கு ஒருவழியாக திருமணமாகி விட்டது. அவருக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்டு வந்தனர். அவர் ஒரு நடிகையை திருமணம் செய்ய போகிறார், பாடகியை திருமணம் செய்ய போகிறார் என்றெல்லாம் செய்தி வந்தது. இந்த செய்தியை மறுத்த வெங்கட்பிரபு அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறும் இதற்காக அவருக்கு பெண் பார்க்கும் வேலை நடந்து கொண்டு இருக்கு என்றார்.

இதையடுத்துதான் பிரேம்ஜியின் திருமண பத்திரிக்கை வெளியானதும் பிரேம்ஜி திருமணம் செய்ய இருக்கும் பெண் மீடியாவில் செய்தியாளராக இருக்கிறார் என்றெல்லாம் செய்தி வெளியானது. ஆனால், மணப்பெண் இந்து, சேலத்தை சேர்ந்தவர் என்றும் சென்னையில் உள்ள வங்கியில் வேலை பார்க்கும் சாதாரண பெண் தான் இந்து. அந்த வங்கியில் தான், பிரேம்ஜி கணக்கு வைத்து இருந்தார் என்றும், வங்கி வேலை விஷயமாக சென்ற போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு, பின் பெரியவர்கள் சேர்ந்து பேசி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதில் பிரேம்ஜிக்கு 45 வயது, இந்துக்கு 25 வயது என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட இருவருக்கும் 20 வயது வித்தியாசம், காதல் என்று வந்துவிட்டால் இதெல்லாம் சாதாரணம் தான். இந்த திருமணத்தில் இளையராஜா கலந்து கொள்ளாதது கங்கை அமரனுக்கு வேதனையாக இருந்தாலும், சமீபத்தில் இளையராஜாவுக்காக வைரமுத்துவை வெளுத்து வாங்கி இருந்தார்.

இளையராஜாவின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தவர்கள் தம்பிகள் தான். அதனால் தான் அவரால் இந்த உயரத்தை அடைய முடிந்தது. ஆனால், அதை எல்லாம் மறந்து விட்டு இளையராஜா இப்படி நடந்து கொள்கிறார். பெரியவர்களுக்குள் என்ன பிரச்சனையாக இருந்தாலும், வெங்கட்பிரபு, கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா என அனைவரும் அன்போடுதான் பழகி வருகிறார்கள்.

ஆனால், இந்த திருமணத்திற்கு யுவன் வந்து இருக்க வேண்டும். அவர், துபாயில் இருப்பதாக சொல்லப்படுகிறது. என்னத்தான் இருந்தாலும், தம்பியின் திருமணத்திற்கு வந்து இருக்கலாம். ஆனால் தம்பி மீது என்ன வெறுப்பு என்று தெரியவில்லை. இன்னும் சிலர் அவர் மதமாறிவிட்டதால், கோவிலில் நடந்த திருமணத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது என பிரபல சினிமா பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.