சோழ மன்னர்களின் வரலாற்று கதையை மையமாக மிக பிரம்மாண்டமாக, அதிக பண செலவில் எடுக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், சரத்குமார் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷம் நிகழ்ச்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
ராஜராஜ சோழனை இந்து மன்னராக காட்டப்படுகிறது, ராஜா ராஜா சோழன் மீது மதம் சாயம் பூசப்படுவதுவது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் மணிரத்தினம், இதில் எதற்கு மதத்தை எல்லாம் உள்ளே கொண்டு வரீங்க, இது ஒரு வரலாற்று திரைப்படம். ராஜராஜ சோழன் நம்ம கொண்டாட கூடிய ஒரு பெருமைமிகு நபர், அதைப்பற்றி வந்த படம் இது.
கல்கி எழுதிய நாவலை வைத்து எடுக்கப்பட்ட படம், இதைத் தாண்டி இது வந்து மதம் என்பது தேவையில்லாத சர்ச்சை என மணிரத்தினம் தெரிவித்தார், மேலும் என்னதான் நாம் வரலாற்று திரைப்படம் எடுத்தாலும் திரையரங்குகளில் வந்து அனைத்து ஜாதியினரும் வந்து படம் பார்க்கிறார்கள், சமீபத்தில் ஒரு திரையரங்குகளில் டிக்கெட் எடுக்க மட்டும் ஒரு சமூகத்தினர் திரையரங்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை இது பற்றி உங்கள் கருத்து என்ன பத்திரிகையாளர் கேட்டதற்கு.
நீங்கள் என்ன செய்வீர்களோ அதைத்தான் நானும் செய்வேன் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டால் எனக்கும் வருத்தம் ஏற்படும் இது வந்து நம்ம ஒரு சமுதாயத்தில் இருக்கின்றோம் உங்களை எவ்வளவு தூரம் பாதிக்கிறதோ அதே அளவு என்னையும் பாதிக்கும் அதனால் நாம் இருவரும் சேர்ந்துதான் ஏதாவது செய்ய வேண்டும் என மணிரத்தினம் பதிலளித்தார்.