லண்டன் சென்று குட்டி கரணம் போட்ட உதயநிதி… முடியாது என மறுத்த மணிரத்தினம்.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் சுபாஷ் கரன் தயாரிப்பில் அதிக பண செலவில், மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு தற்பொழுது திரையரங்கில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன். படம் வெளியானது முதல் தற்பொழுது வரை தமிழக மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பொன்னியின் செல்வன் படம் திரைக்கு வந்து 10 நாட்களை கடக்க இருக்கும் நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்பொழுது வரை கேரளாவில் 93 திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. அதே போன்று தமிழகத்திலும் பல திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த அதிகாலை காட்சி என்பது மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக திரையிடப்பட்டு வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த அளவுக்கு கட்டுக்கடங்கமால் பொன்னியின் செல்வன் படத்தை திரையில் காண மக்கள் அலைமோதுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூலை தான்டி உள்ள பொன்னியின் செல்வன், இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் கடைசியாக வெளியான விக்ரம் படம் தமிழ்நாடு தவிர்த்து, அந்த படம் உலக அளவில் பெற்ற மொத்த வசூலையும் வெறும் பத்து நாட்களில் பொன்னியின் செல்வன் தமிழ்நாடு தவிர்த்து உலக அளவில் வசூலில் விக்ரம் படத்தின் சாதனையை முறியடித்துவிடும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை முதலில் தமிழ்நாட்டு தியேட்டர் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்க்கு கொடுக்கப்பட்டது. இது உறுதி செய்யப்பட்டு பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர் விளம்பரங்களில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் லோகோ இடம்பெற்றது.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் என்ட்ரி கொடுத்தது மணிரத்தினத்திற்கு விருப்பம் இல்லை. லைக்கா நிறுவனம் முதலீடு செய்துள்ளது, தான் சம்பளம் இல்லாமல் கமிஷன் அடிப்படையில் இரண்டு வருடங்கள் உழைத்துள்ளேன். இதில் எந்த ஒரு முதலீடும் செய்யாமல், தமிழ்நாடு ரிலீஸ் என்கிற பெயரில் 8 சதவிகிதம் கமிஷன் எதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும், நமே நேரடியாக ரிலீஸ் செய்வோம் என மணிரத்தினம் உறுதியாக இருந்துள்ளார்.

மணிரத்தினத்தின் பிடிவாதத்தால் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. இருந்தும் படம் வெளியிடுவதற்கு முன்பு, மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை பெறுவதற்கு பல்வேறு வகையில் முயற்சி செய்து வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின், ஆனால் அவரால் எந்த பக்கமும் காய் நகர்த்த முடியவில்லை.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரணை லண்டனில் சென்று நேரடியாக சந்தித்து பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். நீங்கள் நேரடியாக ரிலீஸ் செய்தால் திரையரங்கு தரப்பில் இருந்து போலியான கணக்கு காண்பித்து உங்களை ஏமாற்றிவிடுவார்கள், எங்களுக்கு கொடுக்கும் 8 சதவிகிதம் கமிஷன் பற்றி நீங்கள் யோசிக்காமல் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை எங்களுக்கு கொடுங்கள், என லண்டன் சென்று குட்டிக்கரணம் போட்டுள்ளார் உதயநிதி என கூறப்படுகிறது.

ஆனால் சுபாஸ்கரன் என் நான் ஒன்றும் செய்ய முடியாது, அனைத்தும் மணிரத்தினம் கையில் தான் உள்ளது அவரது முடிவுதான் என்னுடைய முடிவு. அவர் ஓகே என்றால் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என உதயநிதி ஸ்டாலினிடம் கைவிரித்து விட்டார் சுபாஷ்கரன் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிரத்தினம் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்து வெற்றியும் பெற்றுள்ளார்.

தற்போது பல கோடி வசூல் சாதனை படைக்க இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு இருந்தால் அவருக்கு 8% கமிஷன் விதம் பல கோடி கொடுக்க நேரிட்டிருக்கும், ஆனால் தற்பொழுது அது தவிர்க்கப்பட்டு, மேலும் மணிரத்தினம் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை பெற்று தந்துள்ளது. இருந்தும் பொன்னியின் செல்வன் படத்தை தங்கள் நிறுவனம் வெளியிட முடியவில்லை என்கின்ற பெரும் வருத்தம் உதயநிதி ஸ்டாலினுக்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.