சோழ மன்னர்களின் வரலாற்று கதையை மையமாக மிக பிரம்மாண்டமாக, அதிக பண செலவில் எடுக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், சரத்குமார் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் ஒரு பேன் இந்தியா படம் என்பதால், இந்தியா முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாவதற்கு முன்பு இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். பொன்னியின் செல்வன் படத்திற்கு ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லையென்றாலும்,அந்த படத்திற்காக செய்து வந்த விளம்பரங்கள் மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகள் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பார்ப்பதற்கு தமிழர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி உள்ளது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது அந்தப் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியும் மற்றும் அதிக அளவில் செய்யப்பட்ட விளம்பரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது, பொன்னியின் செல்வன் பாகம் 2 இம்மாத இறுதியில் வெளிவர இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான சென்சார் வேலைகளும் முடிந்துவிட்டன.
ஆனால் இதுவரை அந்தப் படத்திற்கான எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியும் தொடங்கப்படாமலே இருக்கின்றது. இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் போது பெருமளவு ப்ரொமோஷனுக்காக செலவு செய்து இந்த படத்தை விளம்பரம் செய்து அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து விட்டோம்.
மேலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வெற்றி அடைந்துள்ளதால் மக்களும் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு எப்போது வரும் என்கின்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பொன்னின் செல்வன் முதல் பாகத்தின் மூலமாகவே அடுத்த வரும் இருக்கும் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் உள்ள நிலையில் தேவையில்லாமல் எதற்காக வீண் செலவு செய்து பிரமோஷன் செய்யப்பட வேண்டும் என்கின்ற முடிவில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் எப்படியும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பார்த்த அனைவரும் இரண்டாவது பாகத்திற்கு வந்து விடுவார்கள், அந்த வகையில் பொன்னின் செல்வன் 2 படம் பிரமோஷன் செய்யாமலே மிகப்பெரிய வெற்றி அடைந்துவிடும். அதனால் படம் வெளியாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே சிறிதளவு பிரமோஷன் நிகழ்ச்சியை நடத்தலாம் என்கின்ற முடிவில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது.