கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரி, திரையரங்குகள், பொது பேருந்து என அனைத்தும் முடக்கப்பட்டு, தற்போது கட்டுப்பாடுகளுடன் ஒவ்வொன்றாக சேவையை தொடங்கியுள்ளது, அந்த வகையில் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்த மாஸ்டர், மற்றும் சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் போன்ற படங்கள் வெளிவர இருக்கின்றது.
இந்நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து நடிகர் விஜய் கோரிக்கை வைத்தார், இதனை தொடர்ந்து தமிழக அரசு 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கியது, இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது, கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வராத நிலையில் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்தது மேலும் கொரோனா தொற்று பரவ வழிவகுக்கும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை குஷ்பு கருத்து கூறுகையில், 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு நன்றி தெரிவித்த நடிகை குஷ்பு, சினிமா துறை மிகப்பெரிய பொருளாதார உருவாக்கும் துறையாகும், தமிழக அரசின் இந்த முடிவு, திரைப்படத் தொழில் மிக விரைவாக முன்னேறி, மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து சிறந்த பொழுதுபோக்குகளை வழங்கும் என்றும்,
பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுபவர்கள், சினிமா தியேட்டர்களின் 100% திறன் செயல்பாட்டில் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டவர்கள், உங்களுக்கு ஒரே ஒரு செய்தி. நீங்கள் கவலைப்பட்டால் தயவு செய்து போக வேண்டாம். உங்கள் பயம் புரிந்துகொள்ளக்கூடியது, உங்களை யாரும் வருமாறு கட்டாயப்படுத்துவதில்லை. கவனித்துக் கொள்ளுங்கள். கொரானா பரவும்னு பயம் இருந்தால் யாரும் திரையரங்கிற்கு வராதீர்கள். தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்கள் என யாரும் உங்களை வற்புறுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிமன்றம், வரும் 11-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .