பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸுக்கு சொந்தமாக சென்னை அபிராமபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகளை கடந்த வருடம் டிசம்பர் மாதம் அவரது மனைவி பார்த்துள்ளார், ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் நகைகளை எடுக்க சென்ற போது லாக்கரில் இருந்த நகைகளை காணவில்லை என மார்ச் மாதம் விஜய் யேசுதாஸ் மனைவி புகார் கொடுத்தார்.
நடிகர் தனுஷ் உடன் நெருங்கிய நண்பரான விஜய் ஜேசுதாஸ் மிக நெருக்கமான குடும்ப நண்பர்களாக வலம் வந்தவர்கள், நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா, விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா என இந்த இரண்டு குடும்பமும் ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.அப்படி இருக்கையில் இருவர் வீட்டிலும் அதிலும் லாக்கரில் இருந்த நகை ஒரே மாதிரியாக திருடு போய் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐஸ்வர்யா வீட்டில் திருடு போன நகைகளை மிக எளிதாக கண்டு பிடித்த போலீசாரால் விஜய் ஜேசுதாஸ் வீட்டில் திருடியவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்த முடியாமல் திணறி வந்தனர். பிப்ரவரி மாதம் நகைகளை காணவில்லை என மார்ச் மாதம் புகார் கொடுக்கப்பட்டது, நகைகள் காணாமல் போன பிப்ரவரி மாதம் வேலைக்கார பெண் வேலையை விட்டு நின்றுவிட்டதாக கூறப்படுகிறது, இந்நிலையில் வேலைக்கார பெண் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்து இருந்தார் விஜய் யேசுதாஸ் மனைவி.
மேலும் ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டில் சிக்கிய ஐஸ்வர்யா வீட்டு கார் டிரைவர் வெங்கடேஷ், இதற்கு முன்பு விஜய் யேசுதாஸ் வீட்டில் வேலை செய்துள்ளார், அதன் பின்பே ஐஸ்வர்யா வீட்டில் வேலைக்கு வந்துள்ளார். விஜய் யேசுதாஸ் வீட்டில் வேலையை விட்டு நின்றாலும் அடிக்கடி விஜய் யேசுதாஸ் வீட்டிற்கு டிரைவர் வெங்கடேசன் சென்று வந்துள்ளாதாக கூறப்பட்ட நிலையில் வேலை ஆட்களை அனைவருடையும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா வீட்டின் லாக்கர் சாவி பயன்படுத்த கூடியது, விஜய் யேசுதாஸ் வீட்டில் லாக்கர் பாஸ்வேர்டு பயன்படுத்தி திறக்க கூடிய டிஜிட்டல் லாக்கர்.இந்த லாக்கர் பாஸ்வர்ட் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் மட்டுமே தெரியும். இந்நிலையில் விஜய் ஜேசுதாஸ் துபாயில் இருந்து வந்த பின்பு அவரிடமும் விசாரணையை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டு இருந்தார்கள்.
இந்த நிலையில் திருடு போன நகைகளின் மதிப்பு மொத்தம் 60 சவரன் வரை இருக்கும் என கூறப்பட்ட நிலையில் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். வீட்டில் பணியாற்றிய 11 ஊழியர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தியதில் யாரும் திருடவில்லை என தெரியவந்தது.
மேலும் பாடகர் விஜய் யேசுதாஸ் வெளிநாட்டில் இருப்பதால் பலமுறை அவரை தொடர்பு கொண்டு கேட்ட போதும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. மேலும் புகார் அளித்த விஜய் யேசுதாஸின் மனைவி தக்ஷனாவும் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை. தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்து வந்துள்ளார்.
மேலும் திருடு போனதாக சொல்லப்பட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மிக பாதுகாப்பான நம்பர் பதிவிடும் லாக்கரில் வைக்கப்பட்டு இருந்தது, லாக்கரும் உடைக்கப்படவில்லை. அந்த லாக்கர் பாஸ்வர்ட் விஜய் ஏசுதாஸ் மற்றும் அவரது மனைவி தக்ஷனா ஆகிய இருவருக்கு மட்டுமே தெரியும் நிலையில். அது எப்படி இவர்கள் இருவருக்கும் தெரியாமல் நகைகள் காணமால் போகும் என தற்பொழுது சந்தேகம் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் வீட்டில் நகைகள் காணாமல் போய் விட்டது என விஜய் யேசுதாஸ் மனைவி நாடகம் ஆடுகிறாரா.? அல்லது துபாயில் இருக்கும் விஜய் யேசுதாஸ் மனைவிக்கு தெரியாமல் நகையை எடுத்து வேறு எதாவது தன்னுடைய பண தேவைக்கு பயன்படுத்தி கொண்டாரா.? என்கிற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விஜய் யேசுதாஸ் தொடர்ந்து முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வருவது மேலும் அவர்கள் குடும்பத்தினர் மீதே சந்தேகம் வலுத்து வருகிறது குறிப்பிடதக்கது.